ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English
https://jacobsladdersundayschool.blogspot.com/
For Sunday School activities and stories in English
பாடம் – 11
அடையாளக் கற்கள்
இதற்கு முந்தின பாடங்களில் மோசே
எவ்வாறு இஸ்ரவேலரை வழிநடத்தினார் என்று பார்த்தோம். வெகுகாலங்கள் கழிந்தது. மோசே மிகவும்
வயதாகி, தனது 120வது வயதில் இறந்து போனார். பின்னர் அவருடைய உதவியாளராகிய யோசுவா இஸ்ரவேலரை
வழிநடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் கானான் அருகில் வந்து விட்டார்கள்,
ஆனால் அவர்கள் அதற்குள் செல்லுவதற்கு முன்பாக யோர்தான் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது.
ஆண்டவர் யோசுவாவிடம், ஆசாரியர்கள்
உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து யோர்தான் ஆற்றில் முதலாவது கால் வைக்கவேண்டும். அவர்கள்
கால்கள் பட்ட உடனே யோர்தான் ஆறு இரண்டாகப் பிரியும் என்று கூறினார். அவர் கூறினது போலவே
நடந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் பிரிந்த ஆற்றின் நடுவே உலர்ந்த தரையில் நடந்து போனார்கள்.
ஆசாரியர்கள் ஆற்றின் நடுவே நின்றுகொண்டிருந்தார்கள்.
இஸ்ரவேலர் எல்லாரும் யோர்தான் ஆற்றைக்
கடந்தபின் ஆண்டவர் யோசுவாவிடம், இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொள்ளும்படி
கூறினார். இஸ்ரவேலிலே கோத்திரங்கள் என்று பன்னிரண்டு பிரிவுகள் இருந்தார்கள். அதில்
கோத்திரத்திற்கு ஒருவராக பன்னிரண்டு பேர் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்.
பின்னர் அவர்களை, யோர்தான் ஆற்றின் நடுப்பகுதியில் ஆசாரியர்கள் நிற்கிற இடத்தின் அருகிலிருந்து
பன்னிரண்டு கற்களை எடுத்துக்கொண்டு வந்து, அந்த கற்களை அவர்கள் அன்று தங்கப்போகிற இடத்தில்
ஒரு குவியலாக வைக்கும்படி கூறினார்.
அப்படிச் செய்வதற்கான காரணம்
என்னவென்றால், வெகு காலம் கழிந்த பின்பு அதைப் பார்க்கின்ற சிறு குழந்தைகள் தங்கள்
பெற்றோர்களிடம் இங்கு வைக்கப்பட்டிருக்கின்ற பன்னிரண்டு கற்களின் அர்த்தம் என்ன என்று
கேட்பார்கள். அப்பொழுது பெற்றோர் அவர்களிடம், புரண்டு ஓடிக்கொண்டிருந்த யோர்தான் ஆறு,
தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாரியர்களின் கால்கள் பட்டவுடனே பிரிந்து
போனது, அதன் நடுவே இஸ்ரவேலர் நடந்து போனார்கள். அதை நினைப்பூட்டும்
அடையாளமாக இந்த கற்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று அவர்களுக்கு கற்றுக்
கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
யோசுவா சொன்னபடியே அந்த பன்னிரண்டு பேரும் யோர்தானுக்கு நடுவாக போய் பன்னிரண்டு
கற்களை எடுத்து, ஆண்டவர் தங்களுக்கு செய்த அற்புதத்தையும், கொடுத்த விடுதலையையும் நினைவு
கூறும் விதமாக, அந்த கற்களை குவித்து வைத்தார்கள்.
வேதபகுதி: யோசுவா 4:1-8
மனப்பாட வசனம்: என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த
சகல உபகாரங்களையும் மறவாதே. (சங்கீதம் 103:2)
பாடப் பயிற்சிகள்
கேள்வி பதில்:
1. மோசேயின் மரணத்திற்குப் பின் இஸ்ரவேலரை நடத்தினது யார்? ……………………………………..
2. யார் யோர்தான் ஆற்றில் முதலாவது கால் வைக்க வேண்டும்? ……………………………………..
3. ஆசாரியர்கள் சுமந்து சென்றது என்ன?
……………………………….
4. யோசுவா எத்தனைப் பேரைத் தெரிந்தெடுத்தார்? ……………………………..
5. யோர்தான் ஆற்றின் நடுப்பகுதியில் யார் நின்று கொண்டிருந்தார்கள்?
……………………………………………
நிரப்புக:
1. இஸ்ரவேல் ஜனங்கள் …………………. அருகில் வந்து விட்டார்கள்.
2. இஸ்ரவேல் ஜனங்கள் ……………………….. ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது.
3. ……………………….. ஒருவராக பன்னிரண்டு பேர் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்
4. ஆற்றின் நடுப்பகுதியில் இருந்து ……………………. கற்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
5. யோர்தான் நடுவே இஸ்ரவேலர் நடந்து போனதையும் நினைப்பூட்டும் அடையாளமாக அந்த ……………………….. வைக்கப்பட்டிருக்கிறது
No comments:
Post a Comment