இடைநிலை வகுப்பு (Intermediate)
12
- 13 வயது
ஞாயிறுபள்ளி பாடங்கள்
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for
free distribution among Sunday School children.
No part of this document can be modified,
sold or used for any commercial purpose.
பாடம் – 1
பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்கள்
Please click the link to visit the English Sunday School Lessons Blog
பரிசுத்த வேதாகமத்தில் 66
புஸ்தகங்கள் உள்ளன. இவை பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 66 புஸ்தகங்களும் பரிசுத்த
வேதாகமத்தில் சேர்க்கப்படுவதற்கு “கேனான்” (canon) என்கிற விதிமுறைகள்
பயன்படுத்தப்பட்டுள்ளது. கேனான் என்கிற கிரேக்க வார்த்தையின் அர்த்தம்
‘விதிமுறை’ அல்லது ‘அளவுகோல்’ என்பதாகும். கேனான் விதிமுறைப்படி பரிசுத்த
வேதாகமத்தின் தரத்தை அடைந்த 66 புத்தகங்களே பரிசுத்த வேதாகமத்தில்
இணைக்கப்பட்டுள்ளன. (கேனான் (Canon) என்றால் என்ன என்பது இப்பாடத்தின்
இறுதியில் விளக்கப்பட்டுள்ளது)
வேதாகமப் புஸ்தகங்களின்
வரிசைமுறை:
வேதாகமப் புஸ்தகங்கள்
எழுதப்பட்ட அல்லது அவைகளிலுள்ள சம்பவங்கள் நடைபெற்ற காலங்களின் அடிப்படையில்
அடுக்கப்படாமல், புஸ்கங்கள் எழுதப்பட்ட மொழிநடை மற்றும் அவைகளின் வகைகளின்
(வரலாற்றுப் புஸ்தகங்கள், கவிதைகள், தீர்க்கதரிசனங்கள்) அடிப்படையில்
அடுக்கப்பட்டுள்ளன. ஆகவே ஒரு பழைய சம்பவத்தை விளக்கும் புஸ்தகம் வேதாகமத்தில்
முதலில் வைக்கப்படாமல், பின்பதாக வைக்கப்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக – யோபு
புஸ்தகத்தின் சம்பவங்கள் மோசே காலத்திற்கு முன்பதாகவே நடந்ததாகக் கருதப்பட்டாலும்,
அது கவிதை வடிவில் இருப்பதால் வேதாகமத்தில் முதலில் வைக்கப்படாமல், கவிதை
புஸ்தகங்களின் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.
பழைய ஏற்பாடு:
பரிசுத்த வேதாகமத்தின்
பழைய ஏற்பாடு எழுதப்பட்ட மூலபாஷை “எபிரெய மொழி” ஆகும். கிறிஸ்தவர்களின் “பழைய
ஏற்பாடும்”, யூதர்களின் வேதமாகிய “தனாக் (Tanakh)” என்பதும்
ஒன்றேயாகும். இவை ஏறத்தாழ கிமு 1600 ஆவது ஆண்டு முதல் கிமு 400 ஆவது ஆண்டு வரை
எழுதப்பட்டவை. பழைய ஏற்பாட்டின் எல்லா புஸ்தகங்களும்
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே எழுதப்பட்டவை.
பழைய ஏற்பாட்டில் 39
புஸ்தகங்கள் உள்ளன. இவை 5 முக்கியமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1. பஞ்சாகமங்கள் (மோசேயின் ஐந்து புஸ்தகங்கள்)
2. வரலாற்றுப் புஸ்தகங்கள்
3. ஞானம் / கவிதை புஸ்தகங்கள்
4. பெரிய தீர்க்கதரிசிகள்
5. சிறிய தீர்க்கதரிசிகள்
(பெரிய / சிறிய
தீர்க்கதரிசிகள் என்பது இவர்கள் எழுதிய தீர்க்கதரிசன புஸ்தகங்களின் அளவை வைத்து
பிரிக்கப்பட்டுள்ளது)
எண் |
பிரிவுகள் |
புஸ்தகங்கள் |
1. |
பஞ்சாகமங்கள் (5
ஆகமங்கள் / புஸ்தகங்கள் ) |
ஆதியாகமம்,
யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் |
2. |
வரலாற்றுப்
புஸ்தகங்கள் (12 புஸ்தகங்கள்) |
யோசுவா,
நியாயாதிபதிகள், ரூத், 1 & 2 சாமுவேல், 1 & 2 இராஜாக்கள், 1 & 2
நாளாகமம், எஸ்றா, நெகேமியா & எஸ்தர் |
3. |
ஞானம் / கவிதை புஸ்தகங்கள் (5
புஸ்தகங்கள்) |
யோபு,
சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உனனதப்பாட்டு |
4. |
பெரிய தீர்க்கதரிசிகள் (5 புஸ்தகங்கள்) |
ஏசாயா,
எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல் |
5. |
சிறிய தீர்க்கதரிசிகள் (12 புஸ்தகங்கள்) |
ஓசியா,
யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா,
மல்கியா. |
யூத வேதம்:
கிறிஸ்தவர்களின் “பழைய
ஏற்பாடும்”, யூதர்களின் வேதமாகிய “தனாக் (Tanakh)” என்பதும்
ஒன்றேயாகயிருந்தாலும் அவைகள் வித்தியாசமாக முறைபடுத்தப்பட்டுள்ளன. யூத வேதம்
மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. நியாயப்பிரமாணம்
– இது தோரா (Torah) என்று
அழைக்கப்படுகிறது
2. தீர்க்கதரிசனங்கள்
– இவை நெவிம் (Nevi’im) என்று
அழைக்கப்படுகின்றன
3. எழுத்துக்கள்
- இவை கெத்துவிம் (Ketuvim) என்று
அழைக்கப்படுகின்றன
தோரா (Torah), நெவிம் (Nevi’im), கெத்துவிம் (Ketuvim) ஆகிய
வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து யூத வேதத்தை
“தனாக் (Tanakh)” என்று அழைக்கின்றனர்.
புதிய ஏற்பாடு:
புதிய ஏற்பாடு கிறிஸ்தவ
வேதாகமத்தில் மட்டுமே உள்ளது. யூத வேதத்தில் இல்லை. புதிய ஏற்பாடு அக்காலத்தில்
வழக்கத்தில் இருந்த கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு கிபி முதல்
நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் 27 புஸ்தகங்கள்
உள்ளன. இவை 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1. சுவிசேஷம்
2. சபை வரலாறு
3. பவுலின் நிருபங்கள் (கடிதங்கள்)
4. பொதுவான நிருபங்கள் (கடிதங்கள்)
5. கடைசிக்கால சம்பவங்கள் / தீர்க்கதரிசனம்
எண் |
பிரிவுகள் |
புஸ்தகங்கள் |
1. |
சுவிசேஷம்(4 புஸ்தகங்கள்) |
மத்தேயு, மாற்கு,
லூக்கா, யோவான் |
2. |
சபை வரலாறு(1 புஸ்தகம்) |
அப்போஸ்தலருடைய
நடபடிகள் |
3. |
பவுலின் நிருபங்கள் (13 புஸ்தகங்கள்) |
ரோமர், 1&2 கொரிந்தியர்,
கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1 & 2 தெசலோனிக்கேயர், 1
& 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன் |
4. |
பொதுவான
நிருபங்கள் (8 புஸ்தகங்கள்) |
எபிரெயர், யாக்கோபு, 1
& 2 பேதுரு, 1,2 73 யோவான், யூதா |
5. |
கடைசிக்கால தீர்க்கதரிசனம்(1 புஸ்தகம்) |
வெளிப்படுத்தின விசேஷம் |
பரிசுத்த வேதாகமத்தின் செய்தி:
பழைய ஏற்பாட்டின் புஸ்தகங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளக்கூடிய காரியங்கள்
· இந்த பிரபஞ்சம் / உலகத்தின் படைப்பு / மனிதனின் வீழ்ச்சி / மனிதன் எவ்வாறு நித்திய ஜீவனை இழந்தான்
· தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் / இரட்சிப்பின் திட்டத்தைத் தடுக்க சாத்தான் மேற்கொண்ட முயற்சிகள் / சூழ்ச்சிகள்
· மேசியாவின் வருகைக்காக (இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்காக) இந்த உலகம் எவ்வாறு ஆயத்தமாக்கப்பட்டது
புதிய ஏற்பாட்டின் புஸ்தகங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளக் கூடிய காரியங்கள்
· மேசியாவின் (இயேசு கிறிஸ்துவின்) பிறப்பு
· இயேசு கிறிஸ்துவினுடைய பரிகார மரணத்தின் மூலமாக தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் நிறைவேற்றப்படுதல்
· மனிதன் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுவது எப்படி
· இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும், உலகத்தின் முடிவும் / தேவனோடு நித்திய காலமாய் வாழ்வது
பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கான சான்றுகள்:
பாடப் பின்குறிப்பு:
புதிய ஏற்பாட்டின் கேனான் சட்டம்:
கிறிஸ்து பரமேறிச் சென்றபின், அவருடைய அப்போஸ்தலர்களும், சீடர்களும் பல்வேறு இடங்களுக்கு சென்று நற்செய்தியை அறிவித்தார்கள். பின்னர் இவர்கள் மூலமாக நடத்தப்பட்ட கிரியைகளும், இவர்களின் போதனைகளும், இவர்களுடைய நிருபங்களும் புஸ்தக வடிவிலாக்கப்பட்டு கிறிஸ்தவ விசுவாசிகளின் பக்திவிருத்திக்காக சபைகளில் வாசிக்கப்பட்டது. ஆரம்ப நூற்றாண்டுகளில் இவ்வாறு எழுதப்பட்ட அநேக புஸ்தகங்கள் பழக்கத்தில் இருந்தன. அதனால் இந்த புஸ்தகங்களை முறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வாறு முறைபடுத்தப்பட்டு ஆதி அப்போஸ்தலர்களாலும், சபை பிதாக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட 66 புஸ்தகங்களே பரிசுத்த வேதாகமத்தோடு இணைக்கப்பட்டன.
ஒரு புஸ்தகம் பரிசுத்த வேதாகமத்தின் தரத்தை
அடைகிறதா என்பதை நிருணயிக்க கிறிஸ்தவ சபையின் ஆதிபிதாக்கள் கடைபிடித்த கோட்பாடுகளே
“கேனான் (canon)” என்று அழைக்கப்படுகின்றது. பரிசுத்த வேதாகமத்தில்
புஸ்தகத்தை இணைப்பதற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்ட 4 கோட்பாடுகள்
அப்போஸ்தல ஆரம்பம்: அந்த புஸ்தகங்கள் இயேசு கிறிஸ்துவுடன் நேரடி தொடர்பிலிருந்த
அப்போஸ்தலர்களாலோ, அல்லது அவர்களுடைய நெருக்கமான சீடர்களாலோ எழுதப்பட்டிருக்க
வேண்டும்
சர்வ அங்கீகாரம்: இந்த கேனான் சட்டம் கிபி 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பாக வரையறுக்கப்பட்டு
முடிக்கப்பட்டுவிட்டபடியால், அந்த கால கட்டங்களில் செயல்பட்டுவந்த எல்லாக்
கிறிஸ்தவ சபைகளாலும், சமூகத்தாலும் இந்த புஸ்தகங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்க
வேண்டும்
சபை / பொது வழிபாட்டில் பயன்பாடு: இந்த புஸ்தகங்கள் ஆதிகால கிறிஸ்தவர்களால் (கிபி 4ஆம்
நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்கள்) கர்த்தருடைய நாளுக்காக கூடிவரும்பொழுது
வாசிக்கப்பட்ட புஸ்தகங்களாய் இருக்க வேண்டும்
மாறுபடாத செய்திகள்: இந்த புஸ்தகங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்ற எந்த ஒரு தகவலும் மற்ற அங்கீகரிக்கப்பட்ட
புஸ்தகங்களிலிருந்து மாறுபாடானதாகவோ, முரண்பாடாகவோ இருக்கக் கூடாது. (2)
இந்த நான்கு முக்கியமான கேனான் கோட்பாடுகளை நிறைவு செய்த புஸ்தகங்களே பரிசுத்த வேதாகமத்தோடு இணைக்கப்பட்டன. இந்த கோட்பாடுகளை நிறைவு செய்யாத வேறு பல புஸ்தகங்கள் பரிசுத்த வேதாகமத்தோடு இணைக்கப்படவில்லை. இந்த புஸ்தகங்கள் அபோகிரிப்பல் புஸ்தகங்கள் (apocryphal books) அல்லது தள்ளுபடி ஆகமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளை ஆக்கியோர்களின் பெயர்கள் நிச்சயமாக அறியப்படாத காரணங்களினால், இவை அப்போஸ்தலர்களால் எழுதப்படாமல் இருக்கலாம் என்கிற சந்தேகத்தினாலும் இவைகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆதார நூற்களின் பட்டியல்:
1. Slick M. (2008, October 12). Manuscript evidence for superior New
Testament Reliability (Retrieved 5th August 2020 from https://carm.org/manuscript-evidence)
2.
Felix Just S. J., The New Testament Canon (Retrieved 5th
August 2020 from http://catholic-resources.org/Bible/NT_Canon.htm#Stages)
(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து, இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம்
செய்யப்பட்டிருக்கிறது)
1.
பரிசுத்த வேதாகமத்தின் 66 புஸ்தகங்கள் “………………….” விதிமுறையின்
அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
2. …………… ஏற்பாட்டின் எல்லா புஸ்தகங்களும் கிறிஸ்து
பிறப்பதற்கு முன்னரே எழுதப்பட்டவை.
3. யூத வேதம் ……………………..
என்று அழைக்கப்படுகின்றது.
4.
…………………… கிரேக்க புதிய ஏற்பாடு பிரதிகள் இன்னும் உள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில்
பதிலளிக்கவும்
1. பரிசுத்த வேதாகமத்தின்
புஸ்தகங்கள் எவ்வாறு அடுக்கப்பட்டுள்ளன?
2. பழைய ஏற்பாட்டின் ஐந்து முக்கிய பிரிவுகள் என்ன?
3. பழைய
ஏற்பாட்டிற்கும், யூத வேதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
4. புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் மூலம் நாம் எவைகளை அறிந்து கொள்ளலாம்?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1. பரிசுத்த
வேதாகமத்தின் நம்பகத்தன்மையை நாம் எவ்வாறு அறியலாம்?
No comments:
Post a Comment