இளநிலை வகுப்பு (JUNIOR)
வயது: 10 - 11 வயது
வகுப்பு: V &
VI
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission
is granted only for free distribution among Sunday School children.
No part of
this document can be modified, sold or used for any commercial purpose.
பாடம்
– 11
ஆசரிப்புக் கூடாரம்
இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் வனாந்திரத்தில் இருந்தபொழுது, தம்மை எப்படி ஆராதிக்க வேண்டும் என்று ஆராதனை முறைமைகளை தேவன் கற்றுக் கொடுத்தார். அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஆராதிப்பதற்கு பயன்படுத்தும்படியாகவும், தேவனுடைய பிரசன்னம் இஸ்ரவேல் மக்களின் மத்தியில் தங்கியிருக்கும்படியாகவும் ஆசரிப்புக் கூடாரம் என்கிற ஒரு விசேஷமான இடத்தை ஆயத்தப்படுத்தும்படியாகக் கூறினார்.
ஆசரிப்புக் கூடாரத்தில்
வெளிப்பகுதி, உட்பகுதி என்று இரண்டு பகுதிகள் இருந்தது. ஆசரிப்புக் கூடாரத்தின்
வெளிப்பகுதி பிரகாரம் (Courtyard) என்று அழைக்கப்பட்டது. உட்பகுதி பரிசுத்த ஸ்தலம்
(Holy Place), மகா பரிசுத்த ஸ்தலம் (Most Holy Place) என்று இரண்டாகப்
பிரிக்கப்பட்டிருந்தது.
பிரகாரம்
என்பது ஆசரிப்புக் கூடாரத்திற்கு வெளியே உள்ள இடமாகும். இங்கு ஆராதனைக்குப்
பயன்படும் பலிபீடம் (Altar of burnt offerings) மற்றும் வெண்கலத்
தொட்டி (bronze basin / Laver) ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. ஆராதனைக்காக கொண்டு வரப்பட்ட
பலிப்பொருட்கள் எல்லாம் இந்த பலிபீடத்தில் தான் தகனிக்கப்பட்டது. ஆசாரியர்கள் பரிசுத்த
ஸ்தலத்திற்கு செல்லுவதற்கு முன்பாக தங்களை கழுவிக் கொள்ளுவதற்காக தண்ணீர் நிரப்பப்பட்ட
வெண்கலத்தொட்டி ஒன்றும் பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
1. சமுகத்தப்பங்களை
வைக்கும் மேஜை (Table of the bread of the presence)
2. குத்து
விளக்கு (Lampstand or the seven-branch candlestick)
3. தூபபீடம் (Altar of incense) என்பவை ஆகும்.
பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்த மேஜையில் ஆசாரியன் தினந்தோறும் புதிதாக சுடப்பட்ட பன்னிரண்டு அப்பங்களை கர்த்தருடைய சமுகத்தில் வரிசையாக அடுக்கி, தூபவர்க்கம் இட்டு வைக்க வேண்டும் (லேவியராகமம் 24:5-9). இந்த அப்பங்கள் சமுகத்தப்பங்கள் என்று அழைக்கப்பட்டன. பரிசுத்த ஸ்தலத்திலே ஆறு கிளைகள் உள்ள ஒரு குத்து விளக்கும் வைக்கப்பட்டிருந்தது. இந்த விளக்கு கர்த்தருடைய சந்நிதியில் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்படியாக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. கடைசியாக பரிசுத்த ஸ்தலத்திலே வைக்கப்பட்டிருந்த பரிசுத்தப் பொருளின் பெயர் தூபபீடம் என்பதாகும். இதில் ஆசாரியர்கள் காலையிலும், மாலையிலும் தவறாமல் தூபம் காட்ட வேண்டும் என்று ஆண்டவர் கற்பித்தார். இந்த தூபபீடத்தில் தூபங்காட்டுவதற்காக ஒரு விசேஷமான பரிசுத்த தூபவர்க்கம் செய்யும் முறையையும் ஆண்டவர் கற்றுக் கொடுத்தார் (யாத்திராகமம் 30:34-38).
பரிசுத்த ஸ்தலத்திற்கு அடுத்தபடியாக ஆசரிப்புக் கூடாரத்தில் இருந்த பகுதியின் பெயர் மகா பரிசுத்த ஸ்தலம் என்பதாகும். இதில் தான் தேவனுடைய பிரசன்னம் தங்கின பரிசுத்தமான உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த உடன்படிக்கைப் பெட்டி என்பது சித்தீம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பெட்டியாகும். இது முழுவதும் பசும் பொன்னினால் மூடப்பட்டது.
உடன்படிக்கைப் பெட்டிக்கு உள்ளாக பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் வைக்கப்பட்டிருந்தது (I இராஜாக்கள் 8:9; 2 நாளாகமம் 5:10; யாத்திராகமம் 40:20). மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் சாட்சி சந்நிதியில் வைக்கப்பட்டிருந்தது (யாத்திராகமம் 16:33,34). ஆரோனுடைய துளிர்த்த கோல் சாட்சிபெட்டி அல்லது உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது (எண்ணாகமம் 17: 4,10,11). இதன் உள்ளே பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த உடன்படிக்கைப் பெட்டிக்கு ஒரு விசேஷமான மூடி செய்யப்பட்டிருந்தது. அது கிருபாசனம் என்று அழைக்கப்பட்டது. அந்த மூடியில் இரு ஓரங்களிலும் ஒவ்வொரு கேரூபீன் அமர்ந்திருப்பது போல் செய்யப்பட்டிருந்தது. அந்த கிருபாசனத்தின் மீதுள்ள கேரூபீன்களின் நடுவில் இருந்து தான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தன்னுடைய கட்டளைகளை கற்பிப்பதாக தேவன் கூறினார். (உடன்படிக்கைப் பெட்டியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இங்கு கிளிக் செய்யவும், மிகஇளநிலை பாடம் - 11, உடன்படிக்கைப் பெட்டி)
இந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரதான ஆசாரியன் தவிர வேறு ஒருவரும் செல்லுவதற்கு அனுமதி இல்லை. பிரதான ஆசாரியன் கூட வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்ல முடியும். பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிப்பதற்காக ஒரு திரைச்சீலை போடப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த பொழுது இந்த திரைசீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிந்து போனது. இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலமாக எல்லா மனிதர்களும், தேவனிடம் நேரடியாக தொடர்பு கொள்ளும்படியாக மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்ல முடியும் என்பதற்கு அது ஒரு அடையாளமாக அமைந்தது.
ஆசிரியர் குறிப்பு:
உடன்படிக்கைப் பெட்டிக்கு
உள்ளே என்ன இருந்தது?
எபிரெயர் 9:4ஐ வாசிக்கும்பொழுது
உடன்படிக்கைப்பெட்டிக்கு உள்ளே பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள், ஆரோனுடைய
துளிர்த்த கோல், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் ஆகியவை வைக்கப்பட்டிருந்ததாக
சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் I இராஜாக்கள் 8:9; 2நாளாகமம் 5:10 ஆகிய இடங்களில் உடன்படிக்கைப்
பெட்டிக்கு உள்ளே பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்ததாக
சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு ஆரோனுடைய துளிர்த்த கோல், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம்
ஆகியவை பின்நாட்களில் உடன்படிக்கைப் பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதாக சில விளக்கங்கள்
கொடுக்கப்படுகின்றது. ஆனால் இவ்வகை விளக்கங்களுக்கு வேதாகமத்தில் எந்த ஒரு ஆதாரமும்
இல்லை.
வேதாகமத்தை கூர்ந்து நோக்கினால்
மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் சாட்சி சந்நிதியில் வைக்கப்பட்டிருந்தது (யாத்திராகமம்
16:33,34). அதாவது சாட்சி பெட்டி என்று அழைக்கப்பட்ட உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்பட்ட
சந்நிதானத்தில் வைக்கப்பட்டது. ஆரோனுடைய துளிர்த்த கோல் சாட்சிபெட்டி அல்லது உடன்படிக்கைப்
பெட்டிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது (எண்ணாகமம் 17: 4,10,11) என்று தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் எபிரெயர் 9:4ல் “உடன்படிக்கைப்
பெட்டியில்” அதாவது உள்ளில் என்று அர்த்தங்கொள்ளும்படியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற
கிரேக்க வார்த்தையாகிய “என் (en)” என்பது உள்ளில், அருகில், முன்பில், ஒரே இடத்தில்
ஆகிய பல பொருள்படும். ஆகவே உடன்படிக்கைப் பெட்டியின் உள்ளாக இவை இருந்தன என்கிற அர்த்தத்தை
நாம் எடுக்காமல், இவை எல்லாம் மகா பரிசுத்த ஸ்தலத்தின் சாட்சி சந்நிதியில் இருந்தன
என்று புரிந்து கொள்ள வேண்டும். (1) உடன்படிக்கைப்பெட்டிக்கு உள்ளாக பத்து கற்பனைகள்
எழுதப்பட்ட கற்பலகைகள் இருந்தது (2)
ஆதார நூற்களின் பட்டியல்:
(1) Lyons, E. (March, 2010), Contents of the Ark of the
Covenant, [On-line], URL: https://apologeticspress.org/contents-of-the-ark-of-the-covenant-2851/
(2) The Holy of Holies, [On-line], URL: https://templeinstitute.org/illustrated-tour-the-holy-of-holies/
(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து
தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)
வேத பகுதி: யாத்திராகமம் 25 - 30
மனப்பாட வசனம்: எபிரெயர் 10: 22
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. ஆசரிப்புக் கூடாரம்
செய்வதற்கு சுத்தமான பொன்னினால் மூடப்பட்ட ………….. மரபலகைகள் பயன்படுத்தப்பட்டன.
2. …………….. என்பது ஆசரிப்புக்
கூடாரத்திற்கு வெளியே உள்ள இடமாகும்.
3. குத்துவிளக்கு
எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்படியாக இடித்துப் பிழிந்த தெளிவான
………………………………. பயன்படுத்தப்பட்டது.
4. பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிப்பதற்காக ஒரு
……………………….. போடப்பட்டிருந்தது.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. ஆசரிப்புக் கூடாரம் என்றால் என்ன?
2. வெண்கலத் தொட்டி எதற்காக வைக்கப்பட்டிருந்தது?
3. உடன்படிக்கைப் பெட்டிக்குள் என்ன இருந்தது?
4. கிருபாசனம் எவ்வாறு செய்யப்பட்டிருந்தது?
கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்
1. ‘மகா பரிசுத்த ஸ்தலம்’ என்றால் என்ன என்றும், அதன் சிறப்புகளைப் பற்றியும் எழுதவும்.
No comments:
Post a Comment