பாடம்
– 12
இடிந்து விழுந்த
எரிகோவின் மதில்
இதற்கு முந்தின பாடங்களில்,
இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்திலிருந்து கானானுக்கு செய்த நீண்ட பயணத்தைப் பற்றி
பார்த்தோம். இஸ்ரவேலருடைய தலைவனாகிய மோசே கானானுக்குள் நுழைவதற்கு முன்பதாகவே தனது
120ஆவது வயதில் இறந்து போனார். அதன்பின்னர் மோசேயின் ஊழியக்காரனாகிய யோசுவா
இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு வழிநடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்குள்
செல்லுவதற்கு முன்பாக புரண்டோடிக்கொண்டிருந்த யோர்தான் ஆற்றைக் கடக்க
வேண்டியிருந்தது. அங்கே ஆண்டவர் ஒரு அற்புதம் செய்ததினால் யோர்தான் ஆறு
பின்னிட்டுத் திரும்பினது, அதனால் ஆற்றின் நடுவே
ஏற்பட்ட உலர்ந்த தரையின் வழியாக
இஸ்ரவேல் ஜனங்கள் ஆற்றைக் கடந்து, கானான் தேசத்திற்குள் நுழைந்தார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தை சென்றடைந்திருந்தாலும், அதை தங்களுடைய சொந்த நாடாக மாற்றுவதற்கு முன்பாக, கானானிய பட்டணங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கானானிய ஜாதிகளிடமிருந்து பிடிக்க வேண்டியிருந்தது. யோர்தானைக் கடந்த உடன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிர்பட்ட முதல் பட்டணம் எரிகோ. அது மதில் சூழ்ந்த ஒரு பெரிய பட்டணமாயிருந்தது. எரிகோ பட்டணத்தின் பாதுகாப்பிற்காக அந்த பட்டணத்தை சுற்றிலும் ஒரு பிரமாண்டமான மதில் கட்டப்பட்டிருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் வருவதை அறிந்தவுடன் எரிகோ பட்டணத்து ஜனங்கள் தங்கள் மதிலை அடைத்து, ஒருவரும் எரிகோ பட்டணத்திற்கு உள்ளே வரவோ, வெளியே போகவோ முடியாதபடி செய்து விட்டார்கள்.
தற்போதைய காலகட்டத்தைப் போலல்லாது,
மிகவும் உயரமான மற்றும் உறுதியான பூட்டப்பட்ட மதிலைக் கடந்து சென்று எரிகோ
பட்டணத்தைப் பிடிக்கும் அளவிற்கு, பண்டைய காலத்தில் நவீன யுத்த கருவிகளோ,
தொழில்நுட்பங்களோ இல்லை. பூட்டியிருக்கும் பட்டணத்தைப் பிடிக்க வேண்டுமானால்,
ஏதாவது உபகரணத்தைக் கொண்டு மதில் மேல் ஏறி உள்ளே செல்ல வேண்டும், அல்லது மதிலின்
கீழாக சுரங்கப்பாதை அமைத்து பட்டணத்துக்கு உள்ளே செல்ல வேண்டும் அல்லது மதிலை
உடைத்து அதில் திறப்புண்டாக்கி பட்டணத்துக்கு உள்ளே செல்ல வேண்டும்.
அல்லாவிட்டால், பட்டணத்தை முற்றுகையிட்டு, தேசத்தின் ஜனங்கள் உணவு மற்றும்
அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையால் சரணடையும்வரை காத்திருக்க வேண்டும். ஆனால்
தேவன் யோசுவாவிடம் பேசி இவை எல்லாவற்றிலுமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு
யுத்தயுக்தியைக் கையாளும்படி கூறினார்.
வேறு ஒரு நபராக
இருந்திருந்தால் அதை சாத்தியமற்ற ஒன்றாக நினைத்திருக்கலாம். ஆனால் மோசேயின்
ஊழியக்காரனாயிருந்து, தேவனுடைய அற்புத செயல்களை எல்லாம் பார்த்திருந்த யோசுவாவோ
தேவனுடைய திட்டத்தை செயல்படுத்த சற்றும் தயங்கவில்லை. ஆகவே மறுநாள் அதிகாலமே
யோசுவா எழுந்திருந்து, எரிகோ பட்டணத்தைப் பிடிப்பதற்காக, தேவன் தந்த திட்டத்தை செயல்படுத்தத்
தொடங்கினார். யுத்தவீரர்கள் பட்டணத்தை வலம் வருவதற்கு ஆயத்தமானார்கள். அவர்களோடே
கூட உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து கொண்டு ஆசாரியர்கள் சென்றார்கள். அவர்களுக்கு
முன்பாக ஏழு ஆசாரியர்கள் எக்காளங்களைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள்.
அவர்களுக்கு முன்பாகவும் பின்பாகவும் யுத்தவீரர்கள் நடந்து சென்றார்கள். இவ்வாறு
பட்டணத்தை சுற்றி வலம் வந்து, தாங்கள் தங்கியிருந்த பாளயத்தை வந்தடைந்தார்கள்.
இவ்வாறு ஆறு நாட்கள் செய்தார்கள். இந்த ஆறு நாட்களும் அவர்கள் எந்த ஒரு சத்தமும்
எழுப்பாமல் மிகவும் அமைதலோடே வலம் வந்தார்கள்.
1. வெள்ளியினால் செய்யப்பட்ட
எக்காளங்கள். இவைகள் வெள்ளிப்பூரிகைகள் என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
(எண்ணாகமம் 10:1-10). எபிரெய மொழியில் இது “சட்ஸோட்ஸ்ரா (chatzotzra)” என்று
அழைக்கப்படுகின்றது. இதை ஆசாரியர்கள் மட்டுமே ஊத முடியும்.
2. ஆட்டுக் கொம்பினால்
செய்யப்பட்ட எக்காளங்கள். இவை ‘யூபிலி எக்காளங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
எபிரெய மொழியில் “ஷோஃபார் (shophar) மற்றும் யோபெல் (yobel) என்று
அழைக்கப்படுகின்றன. (2)
1)
Case, D. (2016, September 19). Walls of Jericho. World
History Encyclopedia. Retrieved from
https://www.worldhistory.org/image/5690/walls-of-jericho/
2) Biblical Commentary on the Old Testament, by Carl Friedrich Keil and Franz Delitzsch [1857-78]. Text Courtesy of Internet Sacred Texts Archive.
வேதாகம பகுதி: யோசுவா 6
மனப்பாட வசனம்: எபிரெயர் 11:30
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. யோர்தானைக் கடந்த உடன்
இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிர்பட்ட முதல் பட்டணம் ………………….
2. பட்டணத்தை வலம்
வருவதற்கு, யுத்தவீரர்களோடு கூட ஆசாரியர்கள் …………………… பெட்டியை சுமந்து கொண்டு
சென்றார்கள்.
3. ………………………… நாளில் பட்டணத்தை சுற்றி ஏழு முறை வலம் வந்தார்கள்.
4. யோசுவா ஜனங்களிடம் எரிகோ பட்டணத்தின் பொருட்கள் …………………………, அதில்
இருந்து எந்த ஒரு பொருளையும் எடுக்கக் கூடாது என்று கூறினார்.
ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. எரிகோவின் பட்டணத்து ஜனங்கள் தங்கள் மதிலை ஏன்
அடைத்தார்கள் ?
2. எரிகோ பட்டணத்தை முதலாம் நாள் எவ்வாறு வலம் வந்தார்கள்?
3. எரிகோ பட்டணத்தின் எந்த பொருட்கள் தேவனுடைய பொக்கிஷத்தில் சேர்க்கப்பட்டன?
4. இஸ்ரவேல் ஜனங்கள் என்ன செய்தபொழுது எரிகோ மதில் விழுந்தது?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1. எரிகோ பட்டணத்தைப் பிடிப்பதற்கு தேவனால்
கொடுக்கப்பட்ட திட்டத்தைப் பற்றி எழுதவும்.
No comments:
Post a Comment