ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY )
வயது: 6 - 7 வயது
வகுப்பு: I & II
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for
free distribution among Sunday School children.
No part of this document can be
modified, sold or used for any commercial purpose.
Click this link to visit the English Sunday School Lessons Blog
பாடம் - 9
துளிர்த்த ஆரோனின் கோல்
இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்கு சென்று கொண்டிருந்தபோது அவர்கள்
வனாந்திரமான ஒரு இடத்தைக் கடந்து செல்ல வேண்டியதிருந்தது. இஸ்ரவேலருடைய தலைவரான
மோசே அவர்களுக்கு ஒவ்வொரு பிரச்சனை வரும் பொழுதும் ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்து
அதை சரி செய்வார். இவ்வாறு அவர் அவர்களை வனாந்திரமான இடத்திலே மிகவும் கவனமாய் வழி
நடத்தி சென்றார். ஆண்டவர் மோசேயோடு பேசி இஸ்ரவேல் ஜனங்கள் கடைபிடிப்பதற்காக அநேக
கட்டளைகளைக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல், மோசேயின் சகோதரனான ஆரோனை, பிரதான
ஆசாரியனாக நியமிக்கும்படியாகவும் கூறினார்.
பழைய காலங்களில், ஆண்டவருக்கு ஊழியம் செய்வதற்காக தெரிந்தெடுக்கப்பட்ட சிலர் இருந்தனர். அவர்கள் ஆசாரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆசாரியர்களில் மிகவும் முக்கியமான நபர் தான் பிரதான ஆசாரியன். இவருடைய முக்கியமான வேலை ஜனங்களுக்காக தேவனிடத்தில் மன்றாடுவது மற்றும் தேவன் மக்களுக்கு சொல்லும் காரியங்களை மக்களிடத்தில் எடுத்து சொல்லுவது ஆகும். இப்படிப்பட்ட பிரதான ஆசாரியனாகத் தான் ஆரோன் நியமிக்கப்பட்டார்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் இவரை பிரதான ஆசாரியராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களில் சிலர், தங்களை, மோசே பிரதான ஆசாரியனாக நியமித்திருக்க வேண்டும் என்று நினைத்தனர். அவர்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக கலகம் செய்தனர். கலகம் என்றால் ஒருவருக்கு விரோதமாக பேசி பிரச்சனைகளை உருவாக்குவது. இந்த கலகத்தை ஆரம்பித்தது கோராகு என்கிற மனிதன். சீக்கிரமே அவனோடு கூட இஸ்ரவேலின் தலைவர்கள் 250 பேர் சேர்ந்து கொண்டனர். ஆனால் கோராகு செய்த காரியம் ஆண்டவருக்கு விருப்பமில்லை. அதனால் பூமி பிளந்து கோராகையும் அவனுடைய கூட்டத்தையும் விழுங்கினது.
ஆண்டவர் மோசேயைப் பார்த்து தான் ஆரோனை பிரதான ஆசாரியனாக தெரிந்து கொண்டதை ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக தாம் ஒரு அடையாளத்தைக் கொடுக்கப்போவதாகவும், அதற்காக இஸ்ரவேல் ஜனங்களுடைய பன்னிரண்டு கோத்திரங்களின் தலைவர்களும் ஒவ்வொரு கோலைக் கொண்டு வரவேண்டும் என்று கூறினார் (கோல் என்றால் தடிமனான ஒரு மரக்குச்சி அல்லது கம்பு என்று அர்த்தம்). லேவி கோத்திரத்தின் சார்பாக ஆரோன் தன்னுடைய கோலைக் கொண்டு வர வேண்டும். பின்னர் எல்லா கோல்களையும் ஆசரிப்புக் கூடாரத்தில், உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் வைக்க வேண்டும் என்றும் கூறினார். (ஆசரிப்பு கூடாரம் என்பது இஸ்ரவேலர் தேவனை ஆராதிப்பதற்கு பயன்படுத்திய இடம், அதற்குள்ளே இருந்த ஒரு விசேஷமான பெட்டி தான் உடன்படிக்கை பெட்டி)
அடுத்த நாள் காலையில் மோசே வந்து பார்த்த பொழுது, ஆரோனின் கோல் துளிர் விட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அது பூப்பூத்து வாதுமைப் பழங்களையும் கொடுத்தது. அதை மோசே எல்லாரிடமும் வந்து காட்டினார். அதன் பின்னர் இஸ்ரவேல் ஜனங்கள் ஆரோன் பிரதான ஆசாரியனாக இருப்பதைப் பற்றி முறுமுறுக்கவில்லை!
மனப்பாட வசனம்: தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். (நீதிமொழிகள் 20:22)
For Sunday School activities and stories in English
https://jacobsladderactivity.blogspot.com/
பாடப் பயிற்சிகள்
கேள்வி பதில்:
2. மோசேக்கு விரோதமான கலகத்தை நடத்தினது யார்?
……………………………………..
5. யாருடைய கோல் துளிர்த்தது?
……………………………………………
பொருத்துக:
1. மோசே - ஊழியம் செய்பவன்
2. ஆரோன் - கலகம்
No comments:
Post a Comment