KINDER (பாலர் வகுப்பு)
வயது – 4 & 5
வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)
பாடம்
– 9
மாராவின்
தண்ணீர்
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிப் போகும் வழியில் ஒரு பெரிய வனாந்திரம் இருந்தது. நீங்கள் வனாந்திரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? வனாந்திரம், தண்ணீர் இல்லாத வறண்ட இடம். அங்கு தண்ணீர் கிடைப்பது கடினம். சில வேளைகளில் பல நாட்கள் அலைந்து திரிந்த பின்னரே தண்ணீர் கண்டு பிடிக்க முடியும்.
ஒரு சமயம் இஸ்ரவேல் ஜனங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் தண்ணீர் கிடைக்காமல் நடந்து செல்ல வேண்டியிருந்தது. சற்று தொலைவு சென்றவுடன் மாரா என்ற ஊரை வந்து அடைந்தார்கள். அங்கு அவர்களுக்கு தண்ணீர் கிடைத்தது. அவர்களுக்கு தண்ணீரைக் கண்டவுடன் ஆனந்தமாய் இருந்திருக்கும். ஆனால் அந்தத் தண்ணீரைக் குடித்தபொழுதோ அது மிகவும் கசப்பாயிருந்தது.
இஸ்ரவேலருடைய தலைவரான மோசே ஆண்டவரை நோக்கி விண்ணப்பம் செய்தான். ஆண்டவர் மோசேயிடம் ஒரு மரத்தைக் காட்டி அதை அந்த தண்ணீரில் போடும்படியாக கூறினார். மோசே ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அந்த மரத்தை தண்ணீரில் போட்டான். உடனே அந்த கசப்பான தண்ணீர் மதுரமான ருசியாக மாறினது (மதுரம் என்றால் இனிமை என்று அர்த்தம்). அந்த நல்லஇனிமையான ருசியுள்ள தண்ணீரைக் குடித்து இஸ்ரவேல் ஜனங்கள் தாகம் தீர்த்துக்கொண்டார்கள்.
வேத பகுதி: யாத்திராகமம்
15: 22 – 26
மனப்பாட வசனம்: நானே
உன் பரிகாரியாகிய கர்த்தர் (யாத்திராகமம் 15: 26)
No comments:
Post a Comment