மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)
வயது: 8 - 9 வயது
வகுப்பு: III & IV
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for
free distribution among Sunday School children.
No part of this document can be
modified, sold or used for any commercial purpose.
பாடம் –8
மிரியாமின் குஷ்டரோகம்
இஸ்ரவேலருடைய தலைவனாகிய மோசேக்கு
ஆரோன் என்கிற சகோதரனும், மிரியாம் என்கிற சகோதரியும் இருந்தார்கள். மோசே நைல் நதியில்
போடப்பட்ட பொழுது அவனுக்கு என்ன சம்பவிக்கப்போகிறது என்பதை பார்த்துக் கொண்டிருந்தது
இந்த மிரியாம் தான்! பல ஆண்டுகள் கழிந்து விட்டது, இப்பொழுது மோசே இஸ்ரவேல் ஜனங்களின்
தலைவனாக மாறிவிட்டார். அவர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு போகும்படியாக
ஒரு பெரிய வனாந்திரம் வழியாய் நடத்தி சென்று கொண்டிருந்தார். அது மிகவும் ஆபத்தான ஒரு
பயணம். இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழியில் ஏதாவது பிரச்சனை ஏற்படும் பொழுதெல்லாம் அவர்கள்
மோசேயிடம் கோபங் கொள்ளுவார்கள்.
ஒரு தடவை மோசேயுடைய சகோதரனாகிய ஆரோனுக்கும், சகோதரியாகிய
மிரியாமுக்கும் மோசேயின் மீது கோபம் ஏற்பட்டது. மோசே
சிப்போராள் என்கிற பெண்ணை திருமணம் செய்திருந்தார். சிப்போராள்
எத்தியோப்பியா வம்சத்தை சேர்ந்தவராக இருந்தார்*. மோசேயின்
சகோதரியாகிய மிரியாம் எத்தியோப்பியா பெண்ணின் காரணமாக மோசேயோடு வாக்குவாதம் செய்தாள்.
ஒருவேளை அந்த எத்தியோப்பியா பெண்ணின் செயல்பாடுகள் யூதர்களால் ஏற்க முடியாததாய் இருந்திருக்கலாம்.
ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் மோசேயை எதிர்த்துப் பேசி “ஆண்டவர் மோசேயுடன் மாத்திரம்
தான் பேசினாரோ எங்களுடன் பேசவில்லையோ” என்று கூறினார்கள். அதை ஆண்டவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆண்டவர் மோசேயையும், மிரியாமையும் ஆரோனையும் ஆசாரிப்புக் கூடாரத்திற்கு வரும்படி அழைத்தார். ஆண்டவர் மேகத் தூணிலே ஆசரிப்புக் கூடார வாசலிலே வந்து இறங்கியிருந்தார். ஆண்டவர் அவர்களிடம் மோசேயைத் தன்னுடைய பணிக்காக தெரிந்தெடுத்திருப்பதினால், மோசேக்கு விரோதமாகப் பேச அவர்களுக்கு பயமில்லாமற் போனதென்ன என்று கேட்டார்.
ஆண்டவர் அவர்கள் மேல் கோபப்பட்டு அந்த இடத்திலிருந்து போய் விட்டார்.
மிரியாமுக்கு குஷ்டரோகம் என்கிற நோய் பிடித்தது. குஷ்டரோகம் வந்தால் தோல் அழுகி நாற்றமெடுக்க
ஆரம்பித்து விடும். ஆரோன் மோசேயிடம் அவர்களுடைய சகோதரிக்காக ஆண்டவரிடம் விண்ணப்பம்
பண்ணும்படியாக மன்றாடினார். மோசே ஆண்டவரிடம் கெஞ்சிப் பிரார்தித்தார்.
ஆண்டவரோ மிரியாமை ஏழு நாள் பாளயத்திற்கு புறம்பாக தங்கவைத்துவிட்டு பின்பு சேர்த்துக்கொள்ளும் படியாக கூறினார். இஸ்ரவேல் தேசத்திலே குஷ்டரோகம் போன்ற தொற்று வியாதிகள் ஏற்படும்பொழுது அது மற்றவர்களுக்கு வராதபடிக்கு அவர்களை பாளயத்திற்கு புறம்பாக்குவது வழக்கம். (இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் பிரயாணம் செய்தபொழுது கூடாரங்களை அமைத்து தற்காலிகமாக தங்கியிருந்த இடத்தைத் தான் பாளயம் என்று அழைத்தார்கள்).
அதே போல ஏழு நாட்கள் கழித்து மிரியாமிற்கு
குஷ்டரோகம் நீங்கினது. அவள் மறுபடியும் சேர்த்துக் கொள்ளப்பட்டாள்.
(குறிப்பு: இந்த
இடத்தில் மோசேயினுடைய மனைவியின் பெயர் கொடுக்கப்படாவிட்டாலும், அது சிப்போராள் என்றே
வேத பண்டிதர்களால் கருதப்படுகிறது).
வேத
பகுதி: எண்ணாகமம் 12
மனப்பாட
வசனம்: எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ………………….
நியமிக்கப்பட்டிருக்கிறது (ரோமர்
13:1).
Click this link to learn how
to organize VBS / Retreats
Click this link to get
Sunday School Guidelines (Part - 1) - Division of Sunday School Classes
Click this link to learn how
to help kids memorize Bible Verses
For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/
Click this link and visit
devotions blog to read Christian articles
பாடப் பயிற்சிகள்
கேள்வி பதில்
1. மோசேயின் சகோதரியின் பெயர் என்ன? ………………………………………
2. மோசே
திருமணம் செய்த பெண்ணின் பெயர் என்ன?
………………………………………
3. ஆண்டவர்
ஆரோனையும், மிரியாமையும் எங்கு வரும்படி கூறினார்? ………………………………………..
4. மோசேக்கு
விரோதமாகப் பேசினதினால் மிரியாமிற்கு என்ன தண்டனைக் கிடைத்தது? …………………………………
5. மிரியாம்
எத்தனை நாட்கள் பாளயத்திற்கு புறம்பே தள்ளப்பட்டாள்? ………………………………………
1. சிப்போராள்
…………………………. வம்சத்தை சேர்ந்தவராக இருந்தார்.
2. ஆண்டவர்
…………………………. ஆசரிப்புக் கூடார வாசலிலே வந்து இறங்கியிருந்தார்.
3. மிரியாமுக்கு
……………………… என்கிற நோய் பிடித்தது.
4. ………………………
மோசேயிடம் அவர்களுடைய சகோதரிக்காக ஆண்டவரிடம் விண்ணப்பம் பண்ணும்படியாக மன்றாடினார்.
5. ஆண்டவர்
மிரியாமை …………………………. புறம்பாக தங்கவைக்கும்படி கூறினார்.
No comments:
Post a Comment