Wednesday, February 5, 2020

பரிசுத்த வேதாகமம் (The Holy Bible), பாலர் வகுப்பு (Kinder ), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 1

பாலர் வகுப்பு (KINDER)

வயது – 4 & 5

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 1

பரிசுத்த வேதாகமம்

நமது வீட்டின் அலமாரியில் பல புஸ்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அதில் ஒவ்வொரு புஸ்தகமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சில புஸ்தகங்கள் நீளமாக இருக்கும், மற்றவை சிறியதாக இருக்கும், சில புஸ்தகங்கள்அநேக பக்கங்கள் கொண்டதாக இருக்கும், சில புஸ்தங்கள் குறைந்த அளவிலான பக்கங்கள் கொண்டதாக இருக்கும். வண்ண வண்ண படங்களைக் கொண்ட புஸ்தகங்கள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இவ்வாறு பலவிதமான புஸ்தகங்கள் நம்மிடத்தில் இருந்தாலும், பரிசுத்த வேதாகமம் தான் உலகிலேயே மிகவும் முக்கியமான புஸ்தகம். பரிசுத்த வேதாகமம் உலகத்தைப் படைத்த தேவனைப் பற்றி நமக்குப் போதிக்கிறது. வெகுகாலத்திற்கு முன் வாழ்ந்த தேவ மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பற்றி இதில் எழுதப்பட்டிருக்கிறது.

பரிசுத்த வேதாகமம், தேவன் மனிதர்களுக்கு எழுதிக் கொடுத்த தேவனுடைய வார்த்தை, அதனால் இதை மிகவும் மரியாதையுடன் கையாள வேண்டும். இதைக் கண்டகண்ட இடங்களில் வைப்பதோ, இதன் பக்கங்களைக் கிழிப்பதோ கூடாது. தினமும் வேத வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டும்.

வேத பகுதி: நீதிமொழிகள் 2:1-9

மனப்பாட வசனம்: உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. (சங்கீதம் 119:105)

For Sunday School activities and stories in English

Click this link to get this lesson in English language (Kinder Lesson - 1, The Holy Bible)



No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...