KINDER (பாலர் வகுப்பு)
வயது – 4 & 5
வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)
பாடம் – 11
பழமரங்களைப் பாதுகாத்தல்
பாலர் வகுப்பிற்கான (1 -- 15) பாடங்களை பெற்றுக் கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
உங்களுக்குத் தெரிந்த சில பழமரங்களின்
பெயர்களைக் கூறமுடியுமா? தேவன் பலவிதமான மரங்களைப் படைத்து, நாம் பயன்படுத்துவதற்காக
நமக்குத் தந்திருக்கிறார். நாம் நிழலுக்காகவும், நமது சுற்றுப்புறத்தை அழகுபடுத்துவதற்காகவும்
மரங்களை நடுகிறோம். மரங்களால் நமக்கு பல உபயோகங்கள் உண்டு.
மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கும்
மிருகங்களையும், மரத்தின் கிளையில் வைக்கப்பட்டிருக்கும் பறவைக்கூடுகளையும் பார்த்திருக்கிறீர்களா?
மரங்கள் பலவிதமான பழங்களைக் கொடுக்கின்றன. மரங்களின் பல பகுதிகள் உணவாகவும், வேறு சில
பகுதிகள் மருந்தாகவும் பயன்படுகின்றன. பழமரங்களை தேவன் நம்முடைய பயன்பாட்டிற்காகவும்,
மிருகங்களுடைய உணவிற்காகவும் கொடுத்திருக்கிறார்.
தேவன் தம்முடைய சிருஷ்டிப்பை தேவையில்லாமல் அழிப்பதை
விரும்பவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்திலிருந்து, கானான் என்கிற தேசத்திற்கு
போய் கொண்டிருந்தபொழுது ஆண்டவர் அவர்களுக்கு பல கட்டளைகளைக் கொடுத்தார். அதில் ஒன்று
என்னவென்றால் அவர்களுடைய உணவிற்காக பயன்படக்கூடிய பழமரங்களை அழிக்கக்கூடாது என்பதே
ஆகும்.
மனப்பாட வசனம்: கர்த்தருடைய
விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.
(சங்கீதம் 104:16)
For Sunday School activities and stories in
English https://jacobsladderactivity.blogspot.com/
No comments:
Post a Comment