Sunday, March 28, 2021

மனன பகுதி: சங்கீதம் 91 (Memorization Portion: Psalm 91), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 10

 மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

பாடம் - 10

சங்கீதம் – 91 

மனப்பாடம் செய்க: 

1.    உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்

2.    நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

அரபு தேசம் ஒன்றில் உள்ள பழங்கால கோட்டைகளில் ஒன்று

3.    அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

வேடனுடைய கண்ணியில் அகப்பட்டுள்ள பறவை

4.    அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

குஞ்சுகளை செட்டைகளின் கீழ் மறைத்து வைத்து பாதுகாக்கும் தாய்பறவை

5.    இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,

6.    இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.

7.    உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.

8.    உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.

9.    எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.

10.     ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

11.        உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

12.        உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.

13.        சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

drawforgod.com

14.        அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.

15.        அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

16.        நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.


ஆசிரியர் குறிப்பு:

சங்கீதம் 91- எழுதியது யார்?

யூத பண்டிதர்களின் கூற்றுப்படி, ஒரு சங்கீதத்தை எழுதியவர் யார் என்று அதில் குறிப்பிடப்படவில்லையென்றால், அதற்கு முந்தைய சங்கீதங்களில் கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள நபரே இந்த சங்கீதத்தினுடைய எழுத்தாளராகக் கருதப்படவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் சங்கீதம் 90ஐ எழுதிய தேவ மனிதனாகிய மோசேயே இந்த சங்கீதத்தையும் எழுதினதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் இதின் எழுத்துமுறையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும் மோசேயேவையே குறிப்பதாக உள்ளது. (1) மிகவும் தொன்மை வாய்ந்த யூதர்களின் வேதாகம விளக்கவுரை புஸ்தகமான மித்ராஷும்,  91ஆம் சங்கீதம், மோசே ஆசரிப்புக்கூடாரத்தை கட்டிமுடித்தபின், மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடி, தேவனுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதை அவன் கண்டபொழுது எழுதின சங்கீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆதார நூல்:

https://www.biblestudytools.com/commentaries/treasury-of-david/psalms-91-1.html

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது) 


உங்களுக்கு தெரியுமா?

சங்கீதம் 91 – “போர்வீரர்களின் சங்கீதம்” அல்லது “போர்வீரர்களின் ஜெபம்” என்றே அழைக்கப்படுகின்றது. அமெரிக்கா போன்ற சில நாடுகளில் உள்ள போர்வீரர்கள் தலையை அல்லது முகத்தை மறைக்கும் சிறிய கைக்குட்டை போன்ற உருமறைப்பு துணிகளில் சங்கீதம் 91 அச்சிடப்பட்டதை பயன்படுத்துகிறார்கள்.

 

சங்கீதம் 91 அச்சிடப்பட்டுள்ள சிறிய கைக்குட்டை போன்ற உருமறைப்பு துணி

 

          

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...