ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY )
வயது: 6 - 7 வயது
வகுப்பு: I & II
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for
free distribution among Sunday School children.
No part of this document can be
modified, sold or used for any commercial purpose.
பாடம் – 2
ஏவாள் பாம்பினால் வஞ்சிக்கப்படுதல்
தேவன் முதல் மனிதர்களான
ஆதாமையும், ஏவாளையும் படைத்து, அவர்களை ஏதேன் என்கிற அழகான தோட்டத்திலே வைத்தார்.
அந்த தோட்டத்தில் மிகவும் அழகான பூக்கள், குளுமையான நீரோடைகள் மற்றும் எல்லா
வகையான மிருகங்கள், பறவைகளும் இருந்தன. அதுமட்டுமல்லாமல், அதில் இனிமையான
பழங்களைக் கொடுக்கும் அனைத்து வகை மரங்களும் நிறைந்திருந்தன. அந்த தோட்டத்தை நல்ல விதத்தில் பராமரிக்குமாறு தேவன் ஆதாமிடம்
கூறினார்.
அந்த தோட்டத்தின் நடுவில்
இரண்டு விசேஷமான (சிறப்பான) மரங்கள் இருந்தன. ஒரு மரத்தின் பெயர் “ஜீவ விருட்சம்”;
இன்னொரு மரத்தின் பெயர் “நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்”. விருட்சம் என்றால்
மரம் என்று அர்த்தம். ஜீவ விருட்சம் என்கிற மரத்தின் பழத்தை சாப்பிட்டால் சாவே
இல்லாமல் என்றென்றைக்கும் வாழலாம். இந்த பழத்தை வேதாகமத்தில் “ஜீவ விருட்சத்தின்
கனி” என்று சொல்லப்பட்டிருக்கிறது. கனி என்றால் பழம் என்று அர்த்தம். தேவன்
அவர்களைப் பார்த்து, “நீங்கள் எல்லா விதமான பழங்களையும் சாப்பிடலாம், ஆனால் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை மாத்திரம் சாப்பிட
வேண்டாம். ஏனென்றால் அதை சாப்பிடுகிற நாளிலே சாக நேரிடும்” என்று கூறினார்.
அந்த தோட்டத்தில் இருந்த
பாம்பு மிகவும் தந்திரமுள்ளதாயிருந்தது. பாம்பிற்கு சர்ப்பம் என்கிற பெயரும் உண்டு. பாம்பு ஏவாளிடம், ‘நீங்கள் இந்த பழத்தை சாப்பிடும் நாளில்
உங்கள் கண்கள் திறக்கப்படும்’ என்று சொல்லி அவளை ஏமாற்றினது. ஏவாள் பாம்பின்
வார்த்தையை நம்பி பழத்தை பறித்து சாப்பிட்டு விட்டு, ஆதாமுக்கும் அதைக்
கொடுத்தாள்.
ஆதாமும், ஏவாளும் தேவன் அவர்களிடம் சொன்ன வார்த்தையை மீறி நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் பழத்தை சாப்பிட்டபடியால் பாவம் செய்தார்கள். அவர்கள் மிகவும் வெட்கப்பட்டு, ஓடிப் போய் ஒளிந்து கொண்டார்கள். ஆனால் ஆதாமும், ஏவாளும், தாம் கொடுத்த கட்டளையை மீறினதை தேவன் அறிந்திருந்தார். ஆகவே அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பினார். ஆதாமும், ஏவாளும், அவர்களை ஏமாற்றிய பாம்பும் தேவனிடம் தண்டனையையும் பெற்றார்கள். ஆகவே நாம் யாருடைய சத்தத்தைக் கேட்கிறோம், யாருக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதில் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.
வேத பகுதி: ஆதியாகமம் 2: 15–17; 3:1-24
மனப்பாட வசனம்: பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:23).
பாடப் பயிற்சிகள்
(குழந்தைகளுக்கு எழுதுவதில் சிரமம் இருந்தால் வாய்மொழி பயிற்சியாக செய்யலாம்)
பாடப்
பயிற்சிகள்
(குழந்தைகளுக்கு எழுதுவதில் சிரமம்
இருந்தால் வாய்மொழி பயிற்சியாக செய்யலாம்)
கேள்வி
பதில்:
1.
ஆதாமும்,
ஏவாளும் வசித்த தோட்டத்தின் பெயர் என்ன? ......................
2.
தோட்டத்தின்
நடுவே எத்தனை விசேஷமான மரங்கள் இருந்தன? ......................
3.
ஏவாளை
ஏமாற்றினது யார்? .......................
4.
ஏவாள்
பழத்தை சாப்பிட்டுவிட்டு யாருக்குக் கொடுத்தாள்? .......................
5. ஆதாமும் ஏவாளும் தேவனால் தண்டிக்கப்பட்டார்களா? ............
காலியான இடத்தை நிரப்பவும்:
1. தோட்டத்தை
நல்ல விதத்தில் பராமரிக்குமாறு
தேவன் …………………………………. கூறினார்.
2. ……………………………………….
அறியத்தக்க மரத்தின் பழத்தை மாத்திரம் சாப்பிட வேண்டாம் என்று தேவன் கூறினார்.
3. அந்த
தோட்டத்தில் இருந்த …………………………. மிகவும் தந்திரமுள்ளதாயிருந்தது.
4. பாம்பு
ஏவாளிடம் “நீங்கள் இந்த பழத்தை சாப்பிடும் நாளில் உங்கள் …………………………….திறக்கப்படும்
என்று சொன்னது.
5. தேவன்
ஆதாமையும் ஏவாளையும் ……………………………. தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பினார்.
No comments:
Post a Comment