Wednesday, April 1, 2020

ஆண்டவர் உலகத்தைப் படைத்தார் (God Created This World), பாலர் வகுப்பு (Kinder ), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 2

பாலர் வகுப்பு (KINDER)

வயது – 4 & 5

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 2

ஆண்டவர் உலகத்தைப் படைத்தார்

பாலர் வகுப்பிற்கான (1 -- 15) பாடங்களை பெற்றுக் கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

நம்மையும், நம்மைப் போன்ற மற்ற மனிதர்களையும் படைத்து இந்த உலகத்தில் வாழும்படி செய்தது ஆண்டவர். நாம் இந்த உலகத்தில் பார்க்கின்ற சூரியன், நிலா, மரங்கள், விதவிதமான பூக்கள், மிருகங்கள், பறவைகள் எல்லாவற்றையும் ஆண்டவர் தான் படைத்தார்.

John Paul Stanley / YoPlace.com.

இந்த உலகத்தைப் படைத்தபொழுது ஆண்டவர் ஆறு நாட்களுக்குள்ளாக  எல்லாவற்றையும் படைத்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார். ஆண்டவர் படைத்த முதல் மனிதனின் பெயர் தெரியுமா? அவன் பெயர் ஆதாம். முதல் மனுஷியின் (பெண்ணின்) பெயர் ஏவாள். 

John Paul Stanley / YoPlace.com.

அவர்கள் எங்கே வசித்தார்கள் தெரியுமா? அவர்கள் வசிப்பதற்காக ஆண்டவர் எதை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்? குடிசையையா? குகையையா? தோட்டத்தையா? (தெரியவில்லை என்றால் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்!).


John Paul Stanley / YoPlace.com.
ஆண்டவர் நமக்காகப் படைத்த எல்லாவித அற்புதமான படைப்புகளுக்காகவும் தினமும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர் நமக்காகப் படைத்த இயற்கையின் பொக்கிஷங்களைப் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

வேத பகுதி: ஆதியாகமம் 1, 2
மனப்பாட வசனம்: ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். (ஆதியாகமம் 1:1)

ஆசிரியர்களுக்கான குறிப்பு: 
4-5 வயதுள்ள குழந்தைகள், இந்த வயதில் தான் மொழியை சற்று கற்று கொள்ள ஆரம்பித்திருப்பதால், பாடத்தில் உள்ள கருத்துக்களை விளக்கும் வார்த்தைகளை (conceptual words) புரிந்து கொள்ளுவதில் சிரமம் இருக்கலாம். ஆகவே ஆசிரியர்கள், பாடங்களை துவங்குவதற்கு முன் அந்த வார்த்தைகளை விளக்கும் படங்களை வைத்தோ, செயல்முறைகளை வைத்தோ அந்த வார்த்தைகளை புரிய வைத்து விட்டு, பாடங்களை கற்றுக் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்முறை பயிற்சி:
இந்த பாடத்தில் வரும் படைப்பு / சிருஷ்டிப்பு ஆகிய வார்த்தைகளை புரிந்து கொள்ளுவதில் குழந்தைகளுக்கு சிரமம் இருக்கலாம். ஆகவே இந்த வார்த்தைகளை கற்றுக் கொடுப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சியை வகுப்பில் செய்யலாம்.
           எ-டு: இது   சாராவின்      படைப்பு   
                      இது   ஜானின்          படைப்பு
இதை குழந்தைகளிடம் காட்டி, ஒவ்வொருவரும் அவரவர் முயற்சியினால் செய்யும் ஒன்றை படைப்பு அல்லது சிருஷ்டிப்பு என்று அழைக்கிறோம். இதைப் போலவே ஆண்டவரும் நம்மை தமது கரத்தினால் படைத்தார் என்று கற்றுக் கொடுக்கவும்.

             

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...