Wednesday, March 31, 2021

பழமரங்களைப் பாதுகாத்தல் (Protecting the Fruit Trees), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 11

 KINDER (பாலர் வகுப்பு) 

வயது – 4 & 5     

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை. 
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose. 
 Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English https://jacobsladdersundayschool.blogspot.com/
For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/ 

பாடம் – 11

பழமரங்களைப் பாதுகாத்தல்



பாலர் வகுப்பிற்கான (1 -- 15) பாடங்களை பெற்றுக் கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

 

                      உங்களுக்குத் தெரிந்த சில பழமரங்களின் பெயர்களைக் கூறமுடியுமா? தேவன் பலவிதமான மரங்களைப் படைத்து, நாம் பயன்படுத்துவதற்காக நமக்குத் தந்திருக்கிறார். நாம் நிழலுக்காகவும், நமது சுற்றுப்புறத்தை அழகுபடுத்துவதற்காகவும் மரங்களை நடுகிறோம். மரங்களால் நமக்கு பல உபயோகங்கள் உண்டு.

John Paul Stanley / YoPlace.com.

                       மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கும் மிருகங்களையும், மரத்தின் கிளையில் வைக்கப்பட்டிருக்கும் பறவைக்கூடுகளையும் பார்த்திருக்கிறீர்களா? மரங்கள் பலவிதமான பழங்களைக் கொடுக்கின்றன. மரங்களின் பல பகுதிகள் உணவாகவும், வேறு சில பகுதிகள் மருந்தாகவும் பயன்படுகின்றன. பழமரங்களை தேவன் நம்முடைய பயன்பாட்டிற்காகவும், மிருகங்களுடைய உணவிற்காகவும் கொடுத்திருக்கிறார்.

John Paul Stanley / YoPlace.com.

                     தேவன் தம்முடைய சிருஷ்டிப்பை தேவையில்லாமல் அழிப்பதை விரும்பவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்திலிருந்து, கானான் என்கிற தேசத்திற்கு போய் கொண்டிருந்தபொழுது ஆண்டவர் அவர்களுக்கு பல கட்டளைகளைக் கொடுத்தார். அதில் ஒன்று என்னவென்றால் அவர்களுடைய உணவிற்காக பயன்படக்கூடிய பழமரங்களை அழிக்கக்கூடாது என்பதே ஆகும்.

                     இஸ்ரவேல் ஜனங்கள் யுத்தத்திற்குப் போகும்பொழுது அங்கே பழமரங்களைக் கண்டால், தங்களுக்கு தங்குவதற்கு இடம் உண்டாக்குவதற்காக, பழமரங்களை கோடரியைக் கொண்டு வெட்டக்கூடாது. பழங்களைக் கொடுக்காத வேறுமரங்கள் இருந்தால் அவைகளை வெட்டி பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் பிற்காலத்தில் அவர்கள் உண்ணுவதற்கான பழங்களை பழமரங்கள் கொடுக்கும். 
Sweet Publishing / FreeBibleimages.org.
இவ்வாறு மரங்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஆண்டவர் இஸ்ரவேலருக்கு கற்றுக் கொடுத்தார். இதிலிருந்து தேவனுடைய சிருஷ்டிப்பை எவ்வாறு பொறுப்போடு பாதுகாக்க வேண்டும் என்பதை நாமும் கற்றுக் கொள்ளுகிறோம்.
வேத பகுதி: உபாகமம் 20:19, 20

மனப்பாட வசனம்: கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும். (சங்கீதம் 104:16) 

For Sunday School activities and stories in

English https://jacobsladderactivity.blogspot.com/              

 

Sunday, March 28, 2021

மனன பகுதி: சங்கீதம் 46 (Memorization Portion: Psalm 46), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 10

 இளநிலை வகுப்பு (JUNIOR) 

பாடம் – 10

சங்கீதம் - 46

மனப்பாடம் செய்க:

1   தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

2   ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,

3   அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)

4   ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.

5   தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது;   
     அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.

6   ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.

Picture credit: Toby Elliott

7   சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

8   பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள்.

9   அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

10  நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

11  சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

மனன பகுதி: சங்கீதம் 91 (Memorization Portion: Psalm 91), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 10

 மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

பாடம் - 10

சங்கீதம் – 91 

மனப்பாடம் செய்க: 

1.    உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்

2.    நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

அரபு தேசம் ஒன்றில் உள்ள பழங்கால கோட்டைகளில் ஒன்று

3.    அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

வேடனுடைய கண்ணியில் அகப்பட்டுள்ள பறவை

4.    அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

குஞ்சுகளை செட்டைகளின் கீழ் மறைத்து வைத்து பாதுகாக்கும் தாய்பறவை

5.    இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,

6.    இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.

7.    உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.

8.    உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.

9.    எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.

10.     ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

11.        உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

12.        உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.

13.        சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

drawforgod.com

14.        அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.

15.        அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

16.        நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.


ஆசிரியர் குறிப்பு:

சங்கீதம் 91- எழுதியது யார்?

யூத பண்டிதர்களின் கூற்றுப்படி, ஒரு சங்கீதத்தை எழுதியவர் யார் என்று அதில் குறிப்பிடப்படவில்லையென்றால், அதற்கு முந்தைய சங்கீதங்களில் கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள நபரே இந்த சங்கீதத்தினுடைய எழுத்தாளராகக் கருதப்படவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் சங்கீதம் 90ஐ எழுதிய தேவ மனிதனாகிய மோசேயே இந்த சங்கீதத்தையும் எழுதினதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் இதின் எழுத்துமுறையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும் மோசேயேவையே குறிப்பதாக உள்ளது. (1) மிகவும் தொன்மை வாய்ந்த யூதர்களின் வேதாகம விளக்கவுரை புஸ்தகமான மித்ராஷும்,  91ஆம் சங்கீதம், மோசே ஆசரிப்புக்கூடாரத்தை கட்டிமுடித்தபின், மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடி, தேவனுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதை அவன் கண்டபொழுது எழுதின சங்கீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆதார நூல்:

https://www.biblestudytools.com/commentaries/treasury-of-david/psalms-91-1.html

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது) 


உங்களுக்கு தெரியுமா?

சங்கீதம் 91 – “போர்வீரர்களின் சங்கீதம்” அல்லது “போர்வீரர்களின் ஜெபம்” என்றே அழைக்கப்படுகின்றது. அமெரிக்கா போன்ற சில நாடுகளில் உள்ள போர்வீரர்கள் தலையை அல்லது முகத்தை மறைக்கும் சிறிய கைக்குட்டை போன்ற உருமறைப்பு துணிகளில் சங்கீதம் 91 அச்சிடப்பட்டதை பயன்படுத்துகிறார்கள்.

 

சங்கீதம் 91 அச்சிடப்பட்டுள்ள சிறிய கைக்குட்டை போன்ற உருமறைப்பு துணி

 

          

மனன பகுதி: சங்கீதம் 8 (Memorization Portion: Psalm -8), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 10

 ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )

வயது: 6 - 7 வயது 
வகுப்பு: I & II 
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் - 10

சங்தீதம் – 8

மனப்பாடம் செய்க:

1.    எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.

pixabay.com

2.    பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். 

Brooklyn Museum / FreeBibleimages.org.

3.    உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், 

     நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

4.    மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 

5.    நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். 

6.    உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 

7.    ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், 

8.    ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 

9.    எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.

உங்களுக்கு தெரியுமா?

சந்திரனுக்கு அப்பொல்லோ 11 விண்கலத்தில் முதலாவது கொண்டு சொல்லப்பட்ட வேதபகுதி சங்கீதம் 8 என்பது தெரியுமா?

Public Domain / Creative Commons License
அப்பொல்லோ 11 விண்கலத்தில் நிலவிற்கு சென்ற பொழுது, சங்கீதம் 8 ஐ வாசித்து தனது குறிப்பேட்டில் எழுதிய பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin) என்ற விண்வெளி வீரர்.


திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...