Friday, September 17, 2021

தரித்து நின்ற சூரியன் (The Sun Stands Still), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 12

ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY )

வயது: 6 - 7 வயது

வகுப்பு: I & II

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 12

தரித்துநின்ற சூரியன் 

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து, கானான் தேசத்தை வந்தடைந்தார்கள். கானான் தேசத்தை அவர்களுக்கு சொந்த நாடாக கொடுப்பதாக ஆண்டவர் வாக்கு கொடுத்திருந்தார். இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தை தங்கள் சொந்த நாடாக மாற்றுவதற்கு முன்பாக பல கானானிய பட்டணங்களை மற்ற ஜனங்களிடமிருந்து கைப்பற்ற வேண்டியிருந்தது. அப்படி கைப்பற்றப்பட்ட இரண்டு பட்டணங்களின் பெயர் ஆயி மற்றும் எரிகோ. இந்தப் பட்டணங்களுக்கு அருகாமையில் கிபியோன் என்கிற ஒரு பட்டணம் இருந்தது. கிபியோனில் இருந்த மக்கள், இஸ்ரவேல் ஜனங்கள் ஆயி மற்றும் எரிகோவைத் தோற்கடித்ததைக் கேள்விப்பட்டார்கள். அதனால் கிபியோனியர் இஸ்ரவேல் ஜனங்களோடு யுத்தம் செய்ய விரும்பாமல் சரணடைந்தார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org.

கிபியோனுக்கு அருகில் இருந்த மலை பகுதிகளில் எமோரியர் என்பவர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுடைய பட்டணங்களை ராஜாக்கள் ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களுள் ஒருவனாகிய எருசலேமின் ராஜா, கிபியோனியர் இஸ்ரவேலரிடம் சரணடைந்ததையும், யோசுவா ஆயியையும், எரிகோவையும் பிடித்ததையும் கேள்விப்பட்டான். மிகவும் பிரமாண்டமான பட்டணங்களையும், பலசாலிகளான மனிதர்களையும் கொண்ட கிபியோன் இஸ்ரவேலரிடம் சரணடைந்ததால் எருசலேமின் ராஜா பயமடைந்தான். அதனால் இஸ்ரவேலரிடம் சரணடைந்து சமாதானம் செய்து கொண்ட கிபியோனியரை அழிக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

அதனால் எருசலேமின் ராஜா, கிபியோனியரோடு யுத்தம் செய்வதற்கு தனக்கு துணையாக வருமாறு மற்ற எமோரியரின் ராஜாக்களை அழைத்தான். அவனோடுகூட எபிரோன், யர்மூத், லாகீஸ், எக்லோன் என்னும் நான்கு எமோரியருடைய பட்டணங்களை ஆண்ட ராஜாக்கள் சேர்ந்து கொண்டார்கள். கிபியோனியர் யோசுவாவிடம் எமோரியரின் ஐந்து ராஜாக்கள் சேர்ந்து தங்களுடன் யுத்தத்திற்கு வருவதால், உடனே வந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்று செய்தி அனுப்பினார்கள். யோசுவாவும் அவனுடனே கூட இருந்த இஸ்ரவேலரின் அனைத்து படை வீரர்களும் உடனே கிபியோனுக்கு புறப்பட்டார்கள்.    திடீரென்று யோசுவாவையும் அவனுடைய படை வீரரையும் கண்ட எமோரியரின் ஐந்து ராஜாக்களும் பதற்றமடைந்தார்கள். ஆண்டவரும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவி செய்து எதிரிகளின்மேல் கல்மழையை விழப்பண்ணினார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

அன்றையதினம் யோசுவாவிற்கு எமோரியரை முழுவதுமாக தோற்கடிப்பதற்கு சூரியஒளியின் வெளிச்சம் மேலும் அதிக நேரத்திற்கு தேவைப்பட்டது. யோசுவா ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்து, பின்னர் “சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்துநில்லுங்கள்” என்றும் கூறினார். 

Sweet Publishing / FreeBibleimages.org.

யோசுவாவின் வார்த்தையின்படியே, இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியரை தோற்கடிக்கும் வரைக்கும் சூரியனும் சந்திரனும் வானத்திலே அசையாமல் தரித்து நின்றன. அதனால் சூரியஅஸ்தமனம் பிந்தி இஸ்ரவேலருக்கு தேவையான வெளிச்சம் அதிசயமாகக் கிடைத்தது.

(ஆசிரியர் குறிப்பு: சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், காலையிலிருந்து இரவு வரை வெவ்வேறு நேரங்களில் அவர்கள் செய்யும் வெவ்வேறு செயல்கள் ஆகியவைகளைப் பற்றி குழந்தைகளுடம் சற்று நேரம் உரையாடி பின்னர் இந்த பாடத்தைக் கற்று கொடுக்கவும்)

வேதபகுதி: யோசுவா 9,10

மனப்பாட வசனம்: சங்கீதம் 135:6

 Click this link to learn how to organize VBS / Retreats

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

பாடப் பயிற்சிகள் 

கேள்வி பதில்: 

1.    கிபியோனியர் யோசுவாவிடம் சரணடைந்ததைக் கேள்விப்பட்டது யார்?  …………………………………….. 

2.    பலசாலிகளான மனிதர்களைக் கொண்ட பட்டணம் எது? …………………………………….. 

3.    எமோரியரின் எத்தனை ராஜாக்கள் கிபியோனியரோடு யுத்தம் செய்ய வந்தார்கள் ? ………………………………. 

4.    கிபியோனியர் யாரிடம் உதவி கேட்டார்கள்? …………………………….. 

5.    யோசுவா சந்திரனை எந்தப் பள்ளத்தாக்கின்மேல் தரித்து நிற்கும்படி கூறினார்?…………………………………………… 

நிரப்புக: 

1.     யோசுவா கைப்பற்றின இரண்டு பட்டணங்களின் பெயர் ………………………., ………………………….      

2.    ……………………………………. இஸ்ரவேல் ஜனங்களோடு யுத்தம் செய்ய விரும்பாமல் சரணடைந்தார்கள்.

3.    கிபியோனுக்கு அருகில் இருந்த …………………. பகுதிகளில் எமோரியர் என்பவர்கள் வசித்து வந்தார்கள்.

4.    ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவி செய்து எதிரிகளின்மேல் ………………………. விழப்பண்ணினார்.

5.    சூரிய ....……………………  பிந்தி இஸ்ரவேலருக்கு தேவையான வெளிச்சம் அதிசயமாகக் கிடைத்தது. 

 

1 comment:

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...