KINDER (பாலர் வகுப்பு)
வயது – 4 & 5
வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)
பாடம் – 12
ராகாபின் சிகப்புக் கயிறு
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து
கானான் தேசத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்கள். கானான் தேசத்தை இஸ்ரவேலருடைய சொந்த
தேசமாக கொடுப்பதாக ஆண்டவர் வாக்குக் கொடுத்திருந்தார். கானான் தேசத்தை வேறு பல ராஜாக்கள்
ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். அதனால் இஸ்ரவேல் ஜனங்கள் போர் செய்து கானான் தேசத்தைப்
பிடிக்க வேண்டியிருந்தது.
இஸ்ரவேல் மக்களை நடத்தி வந்த தலைவனுடைய பெயர்
யோசுவா. இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தைப் பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்தபொழுது
முதலாவதாக எரிகோ பட்டணத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது. யோசுவா இஸ்ரவேலரில் இரண்டு மனிதரை
அனுப்பி எரிகோ பட்டணத்தைப் பார்த்து வரச் சொன்னார். எரிகோ பட்டணத்தில் ராகாப் என்கிற
ஒரு பெண் வசித்து வந்தாள். யோசுவா அனுப்பின
மனிதரை ராகாப் தன் வீட்டில் தங்க வைத்தாள்.
இதை எரிகோ பட்டணத்தின்
ராஜா கேள்விப்பட்டான். அதனால் அந்த இரண்டு மனிதர்களையும் பிடித்துக் கொண்டு வருவதற்கு,
தன்னுடைய சேவகரை அனுப்பினான். ஆனால் ராகாபோ அவர்களை தன்னுடைய வீட்டின் மாடியில் கயிறு
செய்வதற்கு பயன்படும் பொருட்களுக்கு அடியில் மறைத்து வைத்தாள். பின்னர் ராஜாவின் ஆட்கள்
சென்ற பின், அந்த இரண்டு இஸ்ரவேலரும் தப்பித்துக் கொண்டார்கள்.
அவர்கள் தப்பித்துப் போவதற்கு
முன் ராகாபிடம், எரிகோ பட்டணத்தைப் பிடிப்பதற்கு
இஸ்ரவேலர் திரும்பி வரும் பொழுது ராகாப் தன்னுடைய ஜன்னலில் ஒரு சிகப்புக் கயிற்றைக்
கட்ட வேண்டும் என்றும், அந்த அடையாளத்தை வைத்து அந்த வீட்டில் உள்ள அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்
என்றும் கூறினார்கள். ராகாப் அந்த மனிதர் தன்னோடு கூறினபடியே ஒரு சிகப்புக் கயிற்றை
தன்னுடைய ஜன்னலில் கட்டி வைத்தாள். இதனால் இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோ பட்டணத்தைப் பிடித்த
பொழுது அவள் தப்புவிக்கப்பட்டாள்.
வேத பகுதி: யோசுவா
2, 6:22-25
மனப்பாட வசனம்: அவர்
தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை
இரட்சிக்கிறார். (சங்கீதம் 145:19)
No comments:
Post a Comment