KINDER (பாலர் வகுப்பு)
வயது – 4 & 5
வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)
பிலேயாமின் கழுதை
பிலேயாம் என்பவன் மீதியான் தேசத்தில்
வசித்து வந்த ஒரு தீர்க்கதரிசி. தீர்க்கதரிசி என்பவர் ஆண்டவர் கூறுகிற வார்த்தைகளைக்
கேட்டு அதை மக்களிடம் கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானான் என்கிற
தேசத்தை நோக்கி ஒரு நீண்ட பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வழியில் மோவாப்
என்கிற ஒரு தேசத்தை அடைந்தார்கள். பாலாக் என்கிற மோவாப் தேசத்தின் ராஜா இஸ்ரவேல் ஜனங்கள்
தன் தேசத்தின் அருகில் இருப்பதைப் பார்த்து பயமடைந்தான்.
இஸ்ரவேல் ஜனங்களை ஏதாவது தந்திரம்
செய்து தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தான். பிலேயாம் தீர்க்கதரிசியை வரவழைத்து அவனை
வைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக சாபங்களை கூறினால், இஸ்ரவேல் ஜனங்கள் யுத்தத்தில்
தேல்வியடைந்து விடுவார்கள் என்று அவன் நினைத்தான். அதினால் அதிக பணம் கொடுப்பதாக ஆசை
காட்டி, பிலேயாமை அழைத்துக் கொண்டு வந்தான். ஆனால் தேவனுக்கு அது பிடிக்கவில்லை. ஏனென்றால்
இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக தவறான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது என்று அவர் சொல்லியிருந்தார்.
அதனால் கர்த்தருடைய தூதன் ஒருவன் போகிற வழியில் பிலேயாமிற்கு எதிர்ப்பட்டார். பிலேயாமின் கழுதை தேவனுடைய தூதனைப் பார்த்தவுடன் வழியை விட்டு விலகிப் போனது.
அப்பொழுது பிலேயாமிற்கு கோபம் வந்து அவன் கழுதையை அடித்தான்.
உடனே அதிசயமான ஒரு காரியம் நடந்தது. கழுதை தன் வாயத் திறந்து பேச ஆரம்பித்தது. நீ எதற்காக
என்னை இந்த மூன்று தடவை அடித்தாய் என்று கேட்டது.
அப்பொழுது தான் பிலேயாமின் கண்கள்
திறக்கப்பட்டு, கையில் வாளோடு நிற்கிற ஒரு தேவதூதனை அவன் பார்த்தான். உடனே பிலேயாம்
தான் திரும்பி சென்று விடுவதாக கூறினான். தேவதூதன் பிலேயாமைப் பார்த்து, பாலாக்கின்
ஆட்களோடு செல்லும்படியாகவும், ஆனால் சொல்லுப்படி தான் கட்டளையிடும் வார்த்தைகளை மட்டுமே
கூற வேண்டும் என்றும் கூறினார். அதன்படியே பிலேயாம் சென்றான்.
வேத பகுதி: எண்ணாகமம்
22:1-34
மனப்பாட வசனம்:
கர்த்தாவே,
உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன். (சங்கீதம் 86:11a)
No comments:
Post a Comment