பாலர் வகுப்பு (KINDER)
வயது – 4 & 5
வகுப்பு – LKG & UKG (பாலர்
பள்ளி)
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for
free distribution among Sunday School children.
No part of this document can be
modified, sold or used for any commercial purpose.
சவுலும்
தொலைந்துபோன கழுதைகளும்
இஸ்ரவேல் தேசத்திலே கீஸ் என்ற மனிதன் வாழ்ந்து வந்தார். கீஸ் ஆடுமாடுகள், கழுதைகள் போன்ற மிருகஜீவன்களை வளர்த்து வந்தார். அவருக்கு சவுல் என்கிற ஒரு மகன் இருந்தான். பழங்கால மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவு, உடை ஆகியவற்றை மிருகங்களிடமிருந்து பெற்றுவந்தனர்.
மிருகங்களின் உரோமங்கள், தோல் ஆகியவவை மக்கள் அணியும் ஆடைகள், தங்குவதற்கான
கூடாரம் போன்றவற்றை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. ஒட்டகம், கழுதை போன்ற மிருகங்கள் சுமைமிருகங்களாக
பயன்பட்டன. ஆகவே மிருகங்களை தங்களுடைய பொக்கிஷங்களாகவே பழங்கால மக்கள் எண்ணி பாதுகாத்தனர்.
வளர்ப்புமிருகங்களின்
உணவிற்காக பசுமையான புற்கள் உள்ள மேய்ச்சல்நிலங்களுக்கு அவைகளை அழைத்து செல்வர். அவ்வாறு கீசுடைய
கழுதைகள் மேய்ச்சலுக்காக அழைத்துசெல்லப்பட்ட பொழுது, அவைகள் ஒருநாள் காணாமல் போயின.
கீஸ் தன்னுடைய மகனான சவுலையும், வேலைக்காரர் ஒருவரையும் அழைத்து காணாமல் போன கழுதைகளை
கண்டுபிடித்துவரும்படி அனுப்பினார். சவுலும் வேலைக்காரரும் பல இடங்களில் அலைந்து திரிந்தும்
கழுதைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
கழுதைகளை தேட ஆரம்பித்து பல தினங்கள் கடந்துவிட்டதை உணர்ந்த சவுல், தன்னுடைய வேலைக்காரரை வீட்டிற்கு திரும்பி செல்லுவதற்காக அழைத்தார். ஆனால் வேலைக்காரரோ எப்படியாவது கழுதைகளை கண்டுபிடித்து விடவேண்டும் என்று எண்ணினார். சாமுவேல் தீர்க்கதரிசி என்கிற இஸ்ரவேல் தேசத்தின் ஒரு பெரிய தீர்க்கதரிசி அவர்கள் இருந்த கிராமத்திற்கு அருகில் இருந்த ஒரு கிராமத்திற்கு வருவதை அவர் கேள்விப்பட்டிருந்தார். சவுலுடைய வேலைக்காரர் தொலைந்து போன கழுதைகள் இருக்கும் இடத்தை சாமுவேல் தீர்க்கதரிசி தெரியப்படுத்திவிடுவார் என்று நம்பினார்.
சவுலும் வேலைக்காரரும் பக்கத்து கிராமத்தில் இருந்த சாமுவேல் தீர்க்கதரிசியை தேடி சென்று அவரை கண்டுபிடித்தனர். அவர்களைப் பார்த்தவுடனே சாமுவேல் தீர்க்கதரிசி சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன என்றும் அவனுடைய தகப்பனார் சவுலுக்காக கவலைப்படுவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் சாமுவேல் தீர்க்கதரிசி சவுலிடம் இன்னொரு முக்கியமான செய்தியையும் தெரியப்படடுத்தினார்.
ஆண்டவர் இஸ்ரவேல் தேசத்தின் இராஜாவாக சவுலை தெரிந்தெடுத்திருந்தார். அதன்பின்ன்னர் சவுல் தன் வீட்டிற்கு திரும்பி சென்றார். சிறிது காலங்கள் கழித்து, இஸ்ரவேல் தேசத்தின் முதல் இராஜாவாக சவுல் அபிஷேகம் செய்யப்பட்டார்.
வேதபகுதி:
I சாமுவேல் 9:1 -10:9
மனப்பாட
வசனம்: சங்கீதம் 33:11
No comments:
Post a Comment