பாலர் வகுப்பு (KINDER)
வயது – 4 & 5
வகுப்பு – LKG & UKG (பாலர்
பள்ளி)
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for
free distribution among Sunday School children.
No part of this document can be
modified, sold or used for any commercial purpose.
காயீனும்
ஆபேலும்
காயீனும் ஆபேலும் சகோதரர்கள். இவர்கள் உலகின் முதல் மனிதனாகிய ஆதாமுடைய பிள்ளைகள். காயீனும், ஆபேலும் வளர்ந்த பொழுது காயீன் பயிர்களை நட்டு விவசாயம் செய்து வந்தான். ஆபேலோ ஆடுகளை வளர்க்கும் மேய்ப்பனாக இருந்தான்.
ஒரு நாள் இருவரும் தேவனுக்குப் படைப்பதற்காக
காணிக்கைகளைக் கொண்டு வந்தார்கள். காயீன் தன்னுடைய நிலத்தில் விளைந்தவைகளில்
சிலவற்றைக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். ஆபேலோ தன்னுடைய மந்தையில் முதல் பிறந்த
கொழுமையான ஒன்றைக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேல் ஆண்டவருக்கு தன்னிடமிருந்ததில் சிறந்ததைக்
கொடுத்தான்.
தேவன் ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் அங்கீகரித்தார்.
மனப்பாட வசனம்: நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. (1 யோவான் 3:11)
No comments:
Post a Comment