ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
பாடம் – 3
ஆபிராமும் லோத்தும்
ஆபிராம் ஊர் என்கிற பட்டணத்தில் வசித்து வந்தார். ஆபிரகாமுடைய பழைய பெயர் தான் ஆபிராம். ஒருநாள் தேவன் ஆபிராமுக்குத் தரிசனமாகி தான் காட்டும் தேசத்திற்குப் போகும்படி கூறினார். ஆபிராம் உடனே கீழ்ப்படிந்து தன் குடும்பத்துடன் தேவன் காட்டும் தேசத்திற்குப் போகும்படி புறப்பட்டார். ஆபிராமோடு கூட அவருடைய சகோதரனுடைய மகனான லோத்தும் புறப்பட்டார்.
ஆபிராம் திரளான பொன், வெள்ளி மற்றும் மிருகஜீவன்கள் உடைய செல்வந்தனான மனிதராய் இருந்தார். அவரோடே சென்ற லோத்துக்கும் ஏராளமான மிருகஜீவன்கள் இருந்தது. அவர்கள் பிரயாணப்பட்டுப் போகிற வழியில் ஒரு இடத்தில் தங்கியிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இரண்டு பேருடைய மிருகஜீவன்களுக்கும் போதுமான உணவும், தண்ணீரும் இல்லாமற்போனது. இதனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆபிராம் லோத்துவிடம் அவர்களுக்கு முன்பாக இருந்த இடத்தை எல்லாம் காண்பித்து அவனுக்கு வேண்டிய இடத்தை எடுத்துக் கொள்ளும்படியாகவும், பின்பு மீதமிருக்கிற இடத்தை தான் எடுத்துக்கொள்ளுவதாகவும் கூறினார். லோத்து தன்னை சுற்றி இருந்த இடங்களை எல்லாம் நன்றாக பார்த்துவிட்டு பச்சைப் பசேலென்று நீர்வளம் பொருந்தி இருந்த சோதோம் என்கிற ஒரு இடத்தைத் தெரிந்தெடுத்தார். ஆபிராமுக்கோ கரடு முரடான இடம் தான் கிடைத்தது.
லோத்து தெரிந்தெடுத்த இடத்தைப் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், அதில் வசித்து வந்த மக்கள் மிகவும் பொல்லாதவர்களாய் இருந்தார்கள். சோதோமின் ஜனங்கள் தேவனை கோபப்படுத்தும்படியான பாவங்களை செய்து கொண்டிருந்தபடியினால் தேவன் அவர்களை தண்டிக்கும்படியாகத் தீர்மானித்திருந்தார். அதனால் சோதோமில் வசித்துக் கொண்டிருந்த லோத்துவுக்கும் ஆபத்து வருகிறதாயிருந்தது.
ஆனால் ஆபிராம் இதைக் கேள்விப்பட்டவுடன் லோத்துவுக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். தேவன் ஆபிராமுடைய மன்றாட்டிற்கு செவிகொடுத்து லோத்துவையும், அவனுடைய குடும்பத்தையும் அந்த தண்டனையிலிருந்து காப்பாற்றினார். ஆபிராமுடைய ஜெபத்தினிமித்தம் லோத்து தப்புவிக்கப்பட்டான். நாமும் லோத்துவைப்போல சுயநலமான தீர்மானங்களை எடுக்காமல் எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றியும் கரிசனை உடையவர்களாய் இருக்க வேண்டும் அப்பொழுது தான் தேவனுடைய ஆசீர்வாதங்களை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும்.
வேத பகுதி: ஆதியாகமம் 13: 5 – 18
மனப்பாட வசனம்: தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான். (நீதிமொழிகள் 28:26)
பாடப் பயிற்சிகள்
(குழந்தைகளுக்கு எழுதுவதில் சிரமம் இருந்தால் வாய்மொழி
பயிற்சியாக செய்யலாம்)
1.
ஆபிரகாமுடைய
பழைய பெயர் என்ன? ......................
2.
ஆபிரகாமுடைய
சகோதரன் மகனுடைய பெயர் என்ன? ......................
3.
முதலாவது
இடத்தை தெரிந்தெடுத்தது யார்? .......................
4.
லோத்து
தெரிந்தெடுத்த இடத்தின் பெயர் என்ன? .......................
5.
லோத்துவுக்காக
மன்றாடினது யார்?
.......................
சரியா
தவறா:
1. தேவன் ஆபிராமுக்கு தரிசனமாகும் முன், அவர் ஊர் என்கிற பட்டணத்தில் வசித்து வந்தார். ( சரி / தவறு )
2. ஆபிராம் தேவன் காட்டின இடத்திற்கு போக தனியாக புறப்பட்டார். ( சரி / தவறு )
3. ஆபிராமோடு சென்ற லோத்து ஏழையான மனிதன்.
4. சோதோமில் வசித்து வந்த மக்கள் மிகவும் பொல்லாதவர்களாய் இருந்தார்கள். ( சரி / தவறு )
5. ஆபிராமுடைய ஜெபத்தினிமித்தம் லோத்து தப்புவிக்கப்பட்டான்.
( சரி / தவறு )
No comments:
Post a Comment