KINDER (பாலர் வகுப்பு)
வயது – 4 & 5
வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)
பாடம் – 5
யாக்கோபின் கனவு
ஒருமுறை யாக்கோபு தன் வீட்டை
விட்டு ஆரான் என்கிற ஊருக்கு நீண்ட பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. அந்த காலத்தில்
இப்பொழுது நமக்கு இருப்பதைப்போல ரயில் வண்டி, பஸ், கார் போன்ற வாகனங்கள் இல்லை. எவ்வளவு
தூரமாயிருந்தாலும் நடந்தோ அல்லது குதிரை, கழுதை போன்ற மிருகங்களின்மீது அமர்ந்தோ தான்
பயணம் செய்ய வேண்டும்.
யாக்கோபு ஆரானுக்கு நடந்தே செல்ல
வேண்டியிருந்தது. அவனுடன் வேறு யாரும் இல்லை. தனியே போய்க் கொண்டிருந்தான். இரவு வேளை
வந்தது. அவன் மிகவும் களைத்துப் போய் உறங்க சென்றான். அங்கே அவனுக்கு வசதியாக உறங்குவதற்கு
தலையணையோ, படுக்கையோ இல்லை. அதனால் அவன் ஒரு கல்லை எடுத்து தன் தலையின் கீழ் வைத்து
உறங்கினான். அவன் உறங்கிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு கனவு கண்டான்.
அந்தக் கனவில் ஒரு ஏணியைப் பார்த்தான்.
அந்த ஏணியின் நுனி வானத்தை எட்டினது. அந்த ஏணியில் அநேக தேவதூதர்களைப் பார்த்தான்.
அதில் சில தேவதூதர்கள் வானத்திற்கு நேராக மேலே ஏறிக் கொண்டிருந்தார்கள். சில தேவதூதர்கள்
பூமியை நோக்கி கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள். அது எத்தனை அற்புதமான காட்சியாய் இருந்திருக்கும்!
அதுமாத்திரமல்ல, இவை எல்லாவற்றிற்கும்
மேலாகக் கர்த்தர் நின்று யாக்கோபுக்கு தைரியமூட்டும் வார்த்தைகளைக் கூறினார். யாக்கோபு
போகிற இடத்திலெல்லாம் தான் அவனைப் பாதுகாத்து, அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து,
அவனை பத்திரமாக அவனுடைய தகப்பனுடைய வீட்டிற்கு மறுபடியும் அழைத்து வருவதாகவும் வாக்கு
கொடுத்தார். யாக்கோபிற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
யாக்கோபு ஆரானுக்கு பத்திரமாய்
போய் சேர்ந்து, அங்கே பல வருடங்கள் தங்கினான். கர்த்தர் யாக்கோபுக்கு கொடுத்த வாக்கின்படியே
அவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்து ஆசீர்வதித்தார். அதுமட்டுமல்லாமல், மறுபடியும்
அவனுடைய தகப்பன் வீட்டிற்கு திரும்பி வருவதற்கு ஆண்டவர் உதவி செய்தார்.
வேத
பகுதி: ஆதியாகமம் 28: 11 - 22
மனப்பாட
வசனம்: வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து
எனக்கு ஒத்தாசை வரும் (சங்கீதம் 121:2)
No comments:
Post a Comment