Thursday, August 13, 2020

தீயசகோதரர்களை மன்னித்த யோசேப்பு (Joseph Forgives His Brothers), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 4

                         மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

பாடம் – 4

தீயசகோதரர்களை மன்னித்த யோசேப்பு

                      யாக்கோபுடைய பன்னிரண்டு மகன்களில் ஒருவன் தான் யோசேப்பு. யோசேப்பு, யாக்கோபுடைய வயதான காலத்தில் பிறந்ததால், யாக்கோபு அவனிடம் மிகவும் அன்பு செலுத்தி, அழகான ஒரு பலவருண அங்கியை செய்து கொடுத்தார். அதனால் யோசேப்பினுடைய சகோதரர்கள் அவன் மேல் பொறாமை கொண்டார்கள். ஒரு நாள், அவன் தன்னை தன்னுடைய சகோதரர்கள் வணங்குவதாக ஒரு கனவு கண்டு அதைத் தன் சகோதரர்களுக்கு அறிவித்தான். இதனால் யோசேப்பினுடைய சகோதரர்கள் அவன் மேல் மிகவும் கோபம் கொண்டு, அவனைக் கொலை செய்ய திட்டமிட்டார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                     யோசேப்பினுடைய சகோதரர்களுக்கு அதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவனுடைய சகோதரர்கள் ஆடு மேய்ப்பதற்காக தூரமான ஒரு இடத்திற்குப் போயிருந்தார்கள். யோசேப்பின் தகப்பனார் யோசேப்பை அவர்களிடம் அனுப்பி நலம் விசாரித்து வரச் சொன்னார். அவனுடைய சகோதரர்களோ அவன் தூரத்தில் வரும்பொழுதே அவனைக் கொல்லுவதற்காக திட்டம் தீட்டினார்கள். அவனுடைய மூத்த சகோதரனாகிய (மூத்த அண்ணனாகிய) ரூபன் அவனைக் கொல்லாதபடிக்கு அவர்களைத் தடுத்தான். 

Sweet Publishing / FreeBibleimages.org.

                      அதனால் யோசேப்பினுடைய மற்ற சகோதரர்கள் அவனை ஒரு குழியில் தூக்கிப் போட்டார்கள். பின்னர் அவனை அந்த வழியாக வந்த மீதியானிய வியாபாரிகள் கையில் விற்றுப் போட்டார்கள். மீதியானியர் யோசேப்பை எகிப்திற்கு கொண்டு போய் போத்திபார் என்பவனிடம் விற்றார்கள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

                      போத்திபாரின் மனைவி யோசேப்பு செய்யாத குற்றத்தை அவன் செய்ததாக அவன் மேல் பழி சுமத்தினாள். இதனால் அவன் சிறைசாலையில் அடைக்கப்பட்டான். ஆனால் ஆண்டவர் யோசேப்போடே இருந்தார். ஒரு நாள் எகிப்தின் மன்னனான பார்வோன் ஒரு கனவு கண்டான் அதனுடைய அர்த்தத்தை யாராலும் சொல்ல முடியாமல் இருந்தது. தேவன் யோசேப்புக்கு அந்த கனவின் அர்த்தத்தை விளக்கும்படி உதவி செய்தார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                   அந்த கனவின் மூலமாக எகிப்தில் ஏழு வருட பஞ்சகாலம் வரப்போகிறது என்பதை தெரிந்து கொண்டார்கள். அதற்கு முன்பாக ஏழு வருடங்கள் செழிப்பாக இருக்கும் என்றும் பஞ்ச காலத்திற்காக தானியத்தையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் யோசேப்பு சொன்னான். இதனால் பார்வோன் மிகவும் மகிழ்ச்சியடைந்து யோசேப்பை எகிப்து தேசத்திலே இரண்டாவது முக்கியமான நபராக மாற்றினான். பஞ்ச காலம் வருவதற்கு முன்பே, யோசேப்பு தானியங்களை திரளாய் சேர்த்து வைத்தான்.

                    குறிப்பிட்ட காலத்தில் தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டானது. யோசேப்பின் சகோதரர்கள் வசித்த கானான் தேசத்திலும் பஞ்சம் உண்டானது. அதனால் அவர்கள் தானியம் வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள். அவர்கள் தானியத்தை விற்றுக் கொண்டிருப்பது யோசேப்பு என்று தெரியாமல் அவனை வணங்கினார்கள். பின்னர் யோசேப்பு தன் சகோதரர்களுக்கு தான் யார் என்று வெளிப்படுத்தினான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                   யோசேப்பின் சகோதரர்கள் தாங்கள் அவனுக்கு தீங்கு இழைத்தபடியால் அவன் தங்களுக்கு தீங்கு செய்வான் என்று நினைத்தார்கள். யோசேப்பு தன் சகோதரர்களிடம் “நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், கர்த்தரோ அதை நன்மையாக மாறிப் போக பண்ணினார்” என்று சொல்லி அவர்களோடே அன்பாக பேசினான். பின்னர் யோசேப்பின் முழு குடும்பமும் எகிப்தில் குடியேறினார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org.

வேத பகுதி: ஆதியாகமம் 41 - 45

மனப்பாட வசனம்: தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம் (1 யோவான் 4:21)


பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்   

1.      யாக்கோபு யோசேப்பிற்கு என்ன செய்து கொடுத்தான்?

………………………………………

2.    யோசேப்பின் சகோதரர்கள் அவனை யாரிடத்தில் விற்றார்கள்?  .…………………………….

3.    யோசேப்பு எந்த தேசத்திற்கு அழைத்து செல்லப்பட்டான்?

………………………………….

4.    யோசேப்பு எகிப்தில் யாரிடத்தில் விற்கப்பட்டான்? ………………

5.    யோசேப்பு தன்னுடைய சகோதரர்களை மன்னித்தானா?

…………………………………

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும்:

1. யோசேப்பு யாக்கோபுடைய …………………... மகன்களில் ஒருவன்.

     . 7                                    . 12                                    . 2

2. யோசேப்பு அடிமையாக விற்கப்பட்ட மனிதனின் பெயர்

    . பார்வோன்               . பெனியேல்              . போத்திபார்

3. பார்வோன் யோசேப்பை எகிப்தின் ……………………...மாற்றினான்

    . ஆசாரியனாக        . கடவுளாக           . இரண்டாவது நபர்

4. யோசேப்பு பஞ்ச காலத்திற்காக .................... சேர்த்து வைக்க 

     சொன்னான்.

     . தானியம்                     .ஆயுதம்                . பணம்5. 5. யோசேப்பின் சகோதரர்கள் ………………...தானியம் வாங்க        வந்தார்கள்     

     அ. கானானிற்கு            ஆ. எகிப்திற்கு             . ஆரானிற்கு

No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...