Tuesday, August 11, 2020

நோவாவின் பேழை (Noah's Ark), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 4

பாலர் வகுப்பு (KINDER)

வயது – 4 & 5

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 4

நோவாவின் பேழை

 

நோவா ஒரு நீதிமான். நீதிமான் என்றால் நீதியான அல்லது வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற சரியான செயல்களையே எப்பொழுதும் செய்பவன் என்று அர்த்தம். நோவா ஆண்டவரிடத்தில் அன்பு கூர்ந்து, ஆண்டவர் விரும்புகிறவைகளை செய்து வந்தான்.

Jan van 't Hoff/Gospelimages.com

ஆனால் இந்த உலகத்தில் வாழ்ந்த மற்ற ஜனங்கள் ஆண்டவருக்கு விருப்பமில்லாத செயல்களைச் செய்து தவறான வழியில் நடந்தார்கள். அதனால் ஆண்டவர் அவர்கள் மேல் கோபமடைந்து, பூமியில் ஜலப்பிரளயத்தை அனுப்ப திட்டமிட்டார். ஜலப்பிரளயம் என்றால் அதிகமான மழையினாலோ, புயலினாலோ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது, இதை வெள்ளப்பெருக்கு என்றும் சொல்லலாம்.

Jan van 't Hoff/Gospelimages.com

ஆண்டவர் நோவாவிடம் வெள்ளத்திலிருந்து தப்பும்படியாக ஒரு பேழையை (பெரிய கப்பல்) செய்யச் சொன்னார். அந்த பேழையை கொப்பேர் என்கிற மரத்தினால் செய்யச் சொன்னார். அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் ஆண்டவரே கற்றுக் கொடுத்தார். நீங்கள் பீச் அல்லது கடற்கரை போயிருக்கிறீர்களா? அங்கே மிதந்து வரும் பெரிய கப்பல்களை பார்த்திருக்கிறீர்களா? அதைப் போல ஒரு கப்பலைத் தான் பேழை என்று அழைக்கிறோம்.

Jan van 't Hoff/Gospelimages.com

நோவா ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் சொன்னது போலவே பேழையை செய்தான். அந்த பேழைக்குள் உலகில் உள்ள எல்லா மிருகங்களையும், இரண்டு இரண்டு மிருகங்களாக (சுத்தமான மிருகங்களில் ஏழு ஜோடி) உள்ளே கொண்டு வரச் சொன்னார்.

BiblePathwayAdventures.com.

அதன்படி நோவா செய்தான்.   கடைசியாக நோவாவும் அவன் குடும்பமும் பேழைக்கு உள்ளே சென்றனர். ஆண்டவர் பேழையின் கதவை பூட்டினார். 

Moody Publishers / FreeBibleimages.org.

பூமியின் மேல் நாற்பது நாட்கள் பெருமழை பெய்தது. பேழைக்கு வெளியே இருந்த எல்லா உயிரினங்களும் தண்ணீரில் மூழ்கி அழிந்து போயின. பேழைக்குள் இருந்த நோவாவும், அவன் குடும்பத்தினரும், எல்லா மிருகஜீவன்களும் உயிரோடே காக்கப்பட்டனர். நோவா ஆண்டவரை நம்பி கீழ்ப்படிந்ததினால் காப்பாற்றப்பட்டான்.

Jan van 't Hoff/Gospelimages.com

வேதபகுதி: ஆதியாகமம் 6: 9 - 24

மனப்பாட வசனம்: ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம் (1 சாமுவேல் 15:22)



 

                

No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...