மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)
பாடம் – 5
தேவனுக்குப் பயந்த மருத்துவச்சிகள்
எகிப்தில் அடிமையாய் விற்கப்பட்ட
யோசேப்பு தேசத்தின் இரண்டாவது முக்கியமான நபராக மாறினதை முந்தின பாடத்தில் பார்த்தோம்.
பின்னர் எகிப்திற்கு தானியம் வாங்க வந்த யோசேப்பின் சகோதரர்களுக்கு, யோசேப்பு எகிப்தில்
இரண்டாவது இடத்தில் இருப்பது தெரிய வந்தது. யோசேப்பு தன் சகோதரர்களை மன்னித்து அவர்களை
ஏற்றுக்கொண்டான். பின்னர் அவனுடைய குடும்பத்தினர் எகிப்தில் குடியேறினார்கள். ஏறக்குறைய
எழுபது பேராய் எகிப்திற்கு போன இஸ்ரவேலர் நானூறு ஆண்டுகளில் சுமார் இருபது லட்சமாய்
மாறினார்கள்.
யோசேப்பின் நாட்களில் எகிப்தில்
அரசாட்சி செய்த பார்வோன் இறந்து போனார். அதன் பின்னர் எகிப்தில் பார்வோனாய் வந்தவர்களுக்கு
யோசேப்பு எகிப்திற்கு செய்த நன்மைகளைப் பற்றி தெரியவில்லை. பார்வோனுக்கு இஸ்ரவேல் ஜனங்கள்
அதிக எண்ணிக்கையில் இருப்பது பயத்தைக் கொடுத்தது. ஒருவேளை ஏதாவது யுத்தம் வந்தால் அவர்கள்
தங்கள் பகைவரோடு சேர்ந்து தங்களை எதிர்த்து விடுவார்கள் என்று அவன் நினைத்தான். ஆகையால்
இஸ்ரவேல் ஜனங்களை ஒடுக்க நினைத்தான்.
இஸ்ரவேல் ஜனங்களை அடிமைகளாக்கி,
பார்வோனுக்காக பிக்தோம், ராமசேஸ் என்னும் இரண்டு பண்டக சாலை பட்டணங்களை கட்ட வைத்தார்கள்.
அவர்களுக்கு மிகவும் கடினமான வேலைகளைக் கொடுத்து அவர்களை ஒடுக்கினார்கள். அவர்கள் மேல்
வைக்கப்பட்ட ஆளோட்டிகள் அவர்களை அடித்து துன்புறுத்தினார்கள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களை
எவ்வளவாய் ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பெருகினார்கள்.
அதனால் பார்வோன் மிகவும் எரிச்சலடைந்து, இஸ்ரவேல்
ஜனங்களை ஒழிக்க இன்னொரு திட்டம் தீட்டினான். பழைய நாட்களில் குழந்தை பிறக்கும் பொழுது,
பெண்களுக்கு உதவி செய்வதற்கு மருத்துவச்சிகள் இருப்பார்கள். அப்படி இஸ்ரவேல் பெண்களுக்கு
உதவி செய்யும்படி சிப்பிராள், பூவாள் என்கிற இரண்டு எபிரெய மருத்துவச்சிகள் (இஸ்ரவேல்
ஜனங்களை எபிரெயர் என்றும் அழைப்பார்கள்) இருந்தார்கள். பார்வோன் அவர்களை அழைத்து இஸ்ரவேல்
பெண்களுக்கு குழந்தை பிறக்கும்பொழுது, அது ஆண்பிள்ளையாக இருந்தால் அதை நைல் நதியில்
(ஆற்றில்) போட்டுவிடும்படியாக கூறினான்.
ஆனால் மருத்துவச்சிகளோ தேவனுக்கு பயந்தபடியால் அவர்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றினார்கள். பார்வோன் அவர்களை அழைத்து அவர்கள் ஏன் ஆண்பிள்ளைகளை நைல் நதியில் போடவில்லை என்று கேட்டான். அப்பொழுது மருத்துவச்சிகள், “எபிரெய பெண்கள் எகிப்தின் பெண்களைப் போல அல்ல, அவர்கள் பலம் மிகுந்தவர்கள். அதனால் மருத்துவச்சிகள் அவர்களிடம் போவதற்கு முன்பதாகவே குழந்தை பெற்று விடுகிறார்கள்” என்று கூறினார்கள்.
பார்வோன் அதை நம்பினபடியால் அவர்கள் உயிர் பிழைத்தார்கள். மருத்துவச்சிகள்
தேவனுக்குப் பயந்தபடியால் தேவன் அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்தார்.
வேத
பகுதி: யாத்திராகமம் 1: 15-21
மனப்பாட
வசனம்: மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; ………………………………… கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். (மீகா
6:8)
கேள்வி பதில்
1. யோசேப்பின்
குடும்பத்தினர் எந்த தேசத்தில் குடியேறினார்கள்? ………………………………………
2. இஸ்ரவேலர்
கட்டின எகிப்தின் பண்டக சாலைப் பட்டணங்களின் பெயர் என்ன? .…………………………….
3. எபிரெய
மருத்துவச்சிகளின் பெயர் என்ன?
………………………………….
4. பார்வோன்
யாரை நைல் நதியில் போடும்படியாகக் கூறினான்? ………………………………
5. பார்வோன்
மருத்துவச்சிகள் கூறினதை நம்பினானா?
…………………………………
சரியா
தவறா
1. புதிய
பார்வோனுக்கு யோசேப்பு எகிப்திற்கு
செய்தவைகளைப் பற்றி தெரியவில்லை ( சரி / தவறு)
2. ஆளோட்டிகள்
இஸ்ரவேலரை அன்போடு நடத்தினார்கள்.
( சரி / தவறு)
3. பார்வோன்
இஸ்ரவேலரை பெருக அனுமதித்தான்.
(சரி / தவறு)
4. மருத்துவச்சிகள்
தேவனுக்கு பயப்படவில்லை (சரி / தவறு)
5. தேவன்
மருத்துவச்சிகளையும், குடும்பத்தையும் ஆசீர்வதித்தார் (சரி / தவறு)
No comments:
Post a Comment