Wednesday, September 2, 2020

முன்னுரை (Introduction)

 கர்த்தருக்குள் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு,

நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!

“யாக்கோபின் ஏணி ஞாயிறு பள்ளி பாடங்கள் (Jacob’s Ladder Sunday School Lessons)” என்கிற தமிழ் மற்றும் ஆங்கில ஞாயிறு பள்ளி பாடங்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஞாயிறு பள்ளி பாடங்கள் பாலர் பள்ளி முதல் உயர்நிலை வகுப்பு வரை (3 வயது முதல் 15 வயது வரை) உள்ள பள்ளி குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. வேதபாடங்களை அந்தந்த வயதில் உள்ள குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த ஞாயிறுபள்ளி பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பாகங்கள் (2 – Parts) உள்ளன. ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் 40 பாடங்கள் உண்டு. அதை ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் பத்துபத்து பாடங்களாக சேர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

நாங்கள் திரித்துவ தேவனை நம்புகிற (Trinitarian), பரிசுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிற பெந்தெகொஸ்தே (Pentecostal) சபையை சார்ந்தவர்கள். அதனால் இந்த பாடங்கள் அந்த உபதேசங்களின் அடிப்படையிலேயே இருக்கும். இந்த ஞாயிறு பள்ளி பாடங்கள் 2008ஆம் ஆண்டு, நான் ஒரு சபையின் ஞாயிறுபள்ளி ஆசியையாய் இணைந்த பொழுது, அந்த தேசத்தில் எந்த ஒரு ஞாயிறு பள்ளி புத்தகங்களோ, பாடங்களோ இல்லாத காரணத்தினால், அதை பதிவிறக்கம் கூட செய்ய முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், இந்த ஞாயிறுபள்ளி பாடங்களை உருவாக்க ஆரம்பித்தோம். இயன்ற அளவில் எல்லா பாடங்களையும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்றும் நாங்கள் பிரயாசப்படுகிறோம். 

இந்த பாடங்கள் மிகவும் பிரயாசத்தோடும், கவனத்தோடும், பாரத்தோடும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் இதில் செய்ய வேண்டிய பல வேலைகள் உண்டு. இதற்காக ஜெபித்து தாங்கும்படியாகவும், இந்த பாடங்களை பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்படியாகவும் கேட்டுக் கொள்ளுகிறோம்! இந்த பாடபுத்தகங்களில் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள எந்த ஒரு கருத்தையும் மாற்றாமல் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது, அதற்கான வசனஆதாரங்களும் அருகே குறிக்கப்பட்டிருக்கும். அதனோடு கூட அதை புரிந்து கொள்ளும் வகையில் வரலாற்று ஆதாரங்களும் மற்றும் தலைசிறந்த வேதபண்டிதர்களின் விளக்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவைகளுக்கான ஆதார நூற்களின் பட்டியலும் (Reference List) பாடங்களின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடங்களில் எழுத்துபிழைகளோ, மற்றும் வேறு ஏதாவது பிழைகளைக் கண்டால், அதை jacobsladdermin@gmail.com என்கிற  E-mail க்கு ஞாயிறுபள்ளி வகுப்பின் பெயர், பாட எண், பக்க எண் ஆகியவைகளை குறிப்பிட்டு, பிழைகளை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்! 

அதுமட்டுமல்லாமல்

1.    ஞாயிறு பள்ளிகளை நடத்துவது எப்படி (ஞாயிறுபள்ளி வழிமுறைகள் / Sunday School Guidelines)

2.    ஞாயிறு பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்வது எப்படி (ஞாயிறுபள்ளி வழிமுறைகள் / Sunday School Guidelines)

3.    சிறுவர் ஊழியத்திற்கான அழைப்பு ஒருவருக்கு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுவது எப்படி(ஞாயிறுபள்ளி வழிமுறைகள் / Sunday School Guidelines)

4.    குழந்தைகளை ஞாயிறு பள்ளிகளுக்கு (குறிப்பாக வாலிபப் பிள்ளைகளை) அனுப்பும் பெற்றோர்களுக்கான அறிவுரைகள் (ஞாயிறுபள்ளி வழிமுறைகள் / Sunday School Guidelines)

5.    விடுமுறை வேதாகம பள்ளி, Children’s Retreat / Camp ஆகியவற்றை நடத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் பாடங்கள் (விடுமுறை வேதாகம பள்ளி / VBS / Children’s Retreat)

6.    குழந்தைகள் வாசிப்பதற்கான சிறந்த கிறிஸ்தவ புஸ்தகங்கள், மிஷனெரி வரலாறுகள், கிறிஸ்தவ விஞ்ஞானிகள் / தலைவர்கள் ஆகியோரது வரலாறுகள் (கிறிஸ்தவ தகவல்கள் / கிறிஸ்தவ இலக்கியங்கள் / Christian Literature)

போன்றவைகளும் இந்த வலைப்பதிவில் எங்களுடைய அனுபவங்களின் அடிப்படையில் பதிவேற்றப்படும். மேலே முன்னிலைப்படுத்தி(Highlight) காட்டப்பட்டிருக்கிற சிறப்பு சொற்களை (Keywords) வலைப்பதிவின் (blog) வலப்புறம் மேற்பக்கத்தில் உள்ள தேடல்பட்டியில் (Search bar) இட்டால் அது சம்பந்தமான வலைபதிவுகள் எல்லாம் கிடைக்கும்.

தற்பொழுது பதிவேற்றப்பட்டிருக்கிற பாடங்களின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஞாயிறு பள்ளிகளை 6 வகுப்புகளாக பிரித்து பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.    மழலையர் வகுப்பு (Pre-kinder Class) – 3 வயதும் அதற்கு கீழும்

2.    பாலர் வகுப்பு (Kinder Class) – 4 & 5 வயது

3.    ஆரம்ப வகுப்பு (Primary Class) - 6 & 7 வயது

4.    மிக இளநிலை வகுப்பு (Sub-junior Class) - 8 & 9 வயது

5.    இளநிலை வகுப்பு (Junior Class) - 10 & 11 வயது

6.    இடைநிலை வகுப்பு (Intermediate Class) - 12 & 13 வயது

7.    உயர்நிலை வகுப்பு (Senior Class) - 14 & 15 வயது 

மழலையர் வயதில் (Pre-school) விளையாட்டு முறைகளை பயன்படுத்தியும், படங்களைப் பயன்படுத்தியும் பாடங்கள் கற்பிக்க வேண்டியதிருப்பதால், அவற்றிற்கான வழிமுறைகளும் பாடங்களும் பின்னர் பதிவேற்றப்படும். 16 வயது முதல்- 21 வயது வரை உள்ள பள்ளி / கல்லூரி மாணவர்களை ஞாயிறு பள்ளிகளோடு இணைக்காமல் வாலிபர் ஐக்கியத்தில் இணைத்து (இளநிலை வாலிப வகுப்புகளாக Junior Youth Classes) அவர்களுக்கேற்ற அறிவுரைகளை கூறுவது அவர்களுக்கு நன்மை பயக்கும். 

பாடங்களின் அட்டவணை

 

பாலர் வகுப்பு (Kinder Class)

ஆரம்ப வகுப்பு (Primary Class)

1 – பரிசுத்த வேதாகமம்

2 – தேவன் உலகத்தைப் படைத்தார்

3 – காயீனும் ஆபேலும்

4 - நோவாவின் பேழை

5 – யாக்கோபின் கனவு

6 – யோசேப்பின் பலவருண அங்கி

7 – குழந்தை மோசேயின்      நாணற்பெட்டி

8 – மன்னா: வானத்து அப்பம்

9 – மாராவின் தண்ணீர்

10 - சங்கீதம் 23 (மனப்பாடம் செய்க)

1 – சிருஷ்டிப்பின் ஏழு நாட்கள்

2 - ஏவாள் பாம்பினால்

      வஞ்சிக்கப்படுதல்

3 - ஆபிராமும் லோத்தும்

4 – ஈசாக்கும் அபிமெலேக்கும்

5 – ஏசாவின் சேஷ்ட புத்திரபாகம்

6 – யோசேப்பின் தானியக்      களஞ்சியம்

7 – பாம்பாக மாறின மோசேயின்      கோல்

8 – அக்கினி ஸ்தம்பமும் மேக      ஸ்தம்பமும்

9 – துளிர்த்த ஆரோனின் கோல்

10 - சங்கீதம் – 8 (மனப்பாடம் செய்க)

 பாடங்களின் அட்டவணை (தொடரப்பட்டுள்ளது)

 

மிக இளநிலை வகுப்பு (Sub-junior)

இளநிலை வகுப்பு (Junior Class)

1 – உலகின் முதல் மனிதர்கள்

2 - ஆபிரகாம் தேவனால்

     சோதிக்கப்படுதல்

3 – போராடி மேற்கொண்ட     யாக்கோபு

4 – தீயசகோதரர்களை மன்னித்த     யோசேப்பு

5 – தேவனுக்குப் பயந்த     மருத்துவச்சிகள்

6 – மீதியான் தேசத்தில் மோசே

7 – அடிக்கப்பட்ட கன்மலை

8 - மிரியாமின் குஷ்டரோகம்

9 – பின்னிட்டுத் திரும்பின யோர்தான் நதி

10 - சங்கீதம் 91 (மனப்பாடம் செய்க)

1 - மனிதனின் முதல் பாவம்

2 – நோவா காலத்து வெள்ளம்

3 – பாபேல் கோபுரம்

4 – பத்து நீதிமான்கள்       காணப்பட்டாலோ?

5 – என்னைக் காண்பவரை கண்டேன்

6 – யாக்கோபும் லாபானும்

7 – பார்வோனின் கனவு

8 – ஆரோன் செய்த பொன்               கன்றுகுட்டி

9 – தேவனுடைய மகிமையைக் கண்ட மோசே

10 - சங்கீதம் 115 (மனப்பாடம் செய்க)

 

 பாடங்களின் அட்டவணை (தொடரப்பட்டுள்ளது)

 

இடைநிலை வகுப்பு (Intermediate)

உயர்நிலை வகுப்பு (Senior Class)

1 – பரிசுத்த வேதாகமத்தின்      புஸ்தகங்கள்

2 – பஞ்சாகமங்கள்

3 – ஆபிரகாமின் பிரயாணம்

4 – ஈசாக்கின் ஆசீர்வாதம்

5 – யோசேப்பு சகோதரர்களை      சோதித்தல்

6 – மோசே: பார்வோனுடைய      குமாரத்தியின் மகன்

7 – ஆரோன்: முதல் பிரதான      ஆசாரியன்

8 –  நாற்பது வருட வனாந்திர தண்டனை

9 – கோராகின் கலகம்

10 - நாவை அடக்குதல் - யாக்கோபு      3:1-18 (மனப்பாடம் செய்க)

1 – பரிசுத்த வேதாகமம்: தேவனின்      விலைமதிப்பற்ற பொக்கிஷம்

2 – பரிசுத்த திரித்துவம்

3 – பரிசுத்த திரித்துவத்தைப் பற்றிய துர்உபதேசங்கள், நைசியா       விசுவாசப்பிரமாணம்

4 – தேவனுடைய நாமங்கள்

5 – தூதர்கள், சாத்தான், சாத்தானின்      திரித்துவம்

6 - முதல் பாவமும், தேவனுடைய     இரட்சிப்பின் திட்டமும்

7 – ஆபிரகாமுடன் தேவனுடைய      உடன்படிக்கை

8 – யாக்கோபும், இஸ்ரவேலின்      பன்னிரண்டு கோத்திரங்களும்

9 – எகிப்தின் பத்து வாதைகள்

10 - சங்கீதம் – 46 (மனப்பாடம் செய்க)

இந்த பாடங்களையும் பதிவேற்றி முடித்தபின் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய (Link)ஐ கீழே கொடுக்கிறோம். 

கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக!

                                                                                                       

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...