KINDER (பாலர் வகுப்பு)
வயது – 4 & 5
வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)
பாடம்
– 8
மன்னா
– வானத்து அப்பம்
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து என்கிற தேசத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பி செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால்
எகிப்தின் மன்னனான பார்வோன் அவர்களை தன்னுடைய நாட்டிலேயே அடிமைகளாக வைத்துக் கொள்ள
வேண்டும் என்று நினைத்தான். ஆனால் ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவியாக பல அற்புதங்களை
செய்து எகிப்து தேசத்தை விட்டு வெளியே கொண்டு வந்தார்.
அவர்கள் தங்கள் சொந்த தேசமாகிய கானான் தேசத்தை நோக்கி பிரயாணம் செய்ய ஆரம்பித்தார்கள்.
கானான் தேசம் வெகு தொலைவில் இருந்தது. அவர்கள் ஒரு பெரிய வனாந்திரம் வழியாக கால்நடையாகவே
செல்ல வேண்டியிருந்தது. அந்த நாட்களில் இப்பொழுது நமக்கு இருப்பதைப் போல வாகன வசதிகளோ,
உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கடைகளோ இல்லை. தங்களுக்கு வேண்டிய உணவை அவர்களே தேட
வேண்டியிருந்தது. அது வனாந்திரமான இடமாயிருந்ததால் உணவு கிடைக்கக்கூடிய மரங்களோ, செடிகளோ
இல்லை.
இஸ்ரவேலருடைய தலைவனான மோசே ஆண்டவரிடத்தில் உணவுக்காக விண்ணப்பம் செய்தான். ஆண்டவர் அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டு வானத்திலிருந்து அப்பத்தை மழை போல பொழியப் பண்ணினார். இஸ்ரவேல் ஜனங்கள் தினந்தோறும் ஓய்வு நாளை தவிர மற்ற நாட்களில் காலையில் அதை சேகரித்தார்கள்.
அது ஒரு விசேஷமான உணவு. அதற்கு மன்னா
என்று பெயர். அது வெள்ளை நிறமாயும், கொத்தமல்லி அளவாயும் இருந்தது. அதன் ருசி தேனிட்ட
பணியாரம் போல இருந்தது. மன்னா இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆண்டவர்
தம்முடைய ஜனங்களுக்கு உணவு கொடுத்து வனாந்திரத்தில் அவர்கள் பசியை ஆற்றினார்.
வேத பகுதி: யாத்திராகமம்
16: 1-18
மனப்பாட வசனம்: தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். (சங்கீதம்
78:25)
No comments:
Post a Comment