ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
பாடம்
- 7
பாம்பாக
மாறின மோசேயின் கோல்
நைல் நதியில் நாணற்பெட்டிக்குள் வைக்கப்பட்டு, எகிப்தின் மன்னனான பார்வோனுடைய மகளால் கண்டுபிடிக்கப்பட்ட
குழந்தை யார் என்று தெரியுமா? மோசே தான் அந்த குழந்தை. பார்வோனுடைய மகள் அவனை எகிப்தின்
இளவரசனாக வளர்த்தாள். ஆனால் மோசேயோ தான் ஒரு இஸ்ரவேலன் என்றும், தன்னுடைய ஜனங்கள் எகிப்தில்
அடிமைகளாக இருப்பதையும் தெரிந்து கொண்டான் (அடிமைகள் என்றால் தங்களுடைய சொந்த விருப்பத்தின்படி
எதுவும் செய்ய முடியாது, அவர்களுடைய எஜமான்கள் சொல்லுகிறபடியே எல்லாவற்றையும் செய்ய
வேண்டும்). மோசே வளர்ந்தபொழுது, தன்னுடைய சகோதரர்களான இஸ்ரவேலர்கள் எப்படி வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டானது.
அவர் அப்படி பார்க்கச் சென்றபொழுது, எகிப்தியன் ஒருவன் ஒரு இஸ்ரவேல் மனிதனை அடிக்கிறதைப்
பார்த்து, பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த எகிப்தியனைக் கொன்றார். இது எகிப்தின் மன்னனான
பார்வோனுக்குத் தெரிந்தவுடன் அவன் மோசேயை தண்டிக்கும்படி தேடினான். அதற்குள்ளாக மோசே
தப்பித்து மீதியான் என்கிற தேசத்திற்கு போனார். அங்கு போய் மற்றவர்களைப் போல தானும்
ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.
ஒரு நாள் மோசே
ஆடுகளை மேய்த்து, தேவ பர்வதம் என்று சொல்லப்படுகின்ற ஓரேப் என்கிற மலைக்கு வந்தார்.
அங்கு அவன் ஒரு அற்புதமான காட்சியைப் பார்த்தார். அங்கு ஒரு முட்செடி தீப்பற்றி எரிந்து
கொண்டிருந்தது. ஆனால் அந்த முட்செடியோ கருகவில்லை. இதை மோசே பார்த்தவுடன், இந்த காட்சியை
இன்னும் தெளிவாகப் பார்ப்பதற்காக அவர் முட்செடியின் அருகிலே சென்றார். அப்பொழுது முட்செடியிலிருந்து
ஒரு சத்தம் தன்னுடைய பெயரைக் கூப்பிடுவதைக் கேட்டார்.
முட்செடியிலிருந்து ஆண்டவர் மோசேயோடே பேசினார். மோசே எகிப்திற்கு திரும்பி போய், இஸ்ரவேலரை அவர்களுடைய சொந்த தேசத்திற்கு அழைத்து செல்ல
வேண்டும் என்று சொன்னார். ஆண்டவர் மோசேயிடம் பார்வோன் தன்னுடைய தேசத்திலிருந்து
இஸ்ரவேல் ஜனங்களை அவ்வளவு எளிதாக வெளியே விட மாட்டான் என்றும் கூறி, அதனால் அவனுக்கு
முன்பாக நிகழ்த்துவதற்காக அற்புதங்களையும் காட்டிக் கொடுத்தார். அதில் முதலாவதாக ஆண்டவர்
மோசேயை செய்ய சொன்ன அற்புதம் என்னவென்றால், "மோசேயின் கோலை பாம்பாக மாற்றுவது!"
அதன்படி, மோசே பார்வோனை பார்க்கும்படி சென்றார். பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை விடமாட்டேன் என்று சொன்னான். மோசே தன்னுடைய கையிலிருந்த கோலை பார்வோனுக்கு முன்பாக கீழே போட்டார். உடனே அந்த கோல் பாம்பாக மாறினது.
பார்வோன் மோசேயைப் பார்த்து தன்னுடைய மந்திரவாதிகளும் கூட அதே
அற்புதத்தை நிகழ்த்தி காட்ட முடியும் என்று சவால் விட்டான். அது போலவே பார்வோனுடைய
மந்திரவாதிகளும் தங்களுடைய கோலை பார்வோனுக்கு முன்பாகப் போட்டார்கள். அவர்களுடைய கோலும்
பாம்பாக மாறினது. ஆனால் மோசேயுடைய கோலோ அவர்களுடைய பாம்புகளை எல்லாம் விழுங்கிப் போட்டது.
வேத பகுதி: யாத்திராகமம் 3,4
மனப்பாட வசனம்: ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். (சங்கீதம் 91:15)
கேள்வி பதில்:
1.
மோசே
பார்வோனிடத்திலிருந்து தப்பும்படி எந்த தேசத்திற்கு சென்றார்? ……………………………………..
3. ஓரேப் மலையின் இன்னொரு பெயர் என்ன?
………………………………………..
5. மோசே நிகழ்த்திய முதல் அற்புதத்தில், எது பாம்பாக மாறினது? ……………………………….
2. மோசே ………………………… ஒருவன் ஒரு இஸ்ரவேல் மனிதனை அடிக்கிறதைப் பார்த்தார்.
No comments:
Post a Comment