KINDER (பாலர் வகுப்பு)
வயது – 4 & 5
வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)
பாடம்
– 6
யோசேப்பின் பலவருண அங்கி
யோசேப்பு
தன்னுடைய தகப்பன் மற்றும் பதினோறு சகோதரர்களுடன் கானான் என்கிற தேசத்திலே வசித்து வந்தான்.
அவர்கள் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார்கள். ஆடு மேய்ப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா?
ஒரு ஆடு மேய்ப்பவர் முன்னே நடந்து சென்று கொண்டிருப்பார். அவருக்கு பின்னே ஒரு கூட்டம்
ஆடுகள் சென்று கொண்டிருக்கும். யோசேப்பும் கூட தன் சகோதரர்களோடு ஆடு மேய்க்க செல்லுவதுண்டு.
யோசேப்பு ஆண்டவருக்கு பயந்து நடப்பவன்.
அவனுக்கு சரியான செயல்களை செய்வதே விருப்பம். சில வேளைகளில் அவனுடைய சகோதரர்கள் தவறு
செய்யும்பொழுது அதைத் தன் தகப்பனிடம் கூறுவான். தன்னுடைய சகோதரர்களும் தன்னைப் போலவே
ஆண்டவருக்குப் பயந்து, தவறான வழிகளை விட்டு விலக வேண்டும் என்று அவன் நினைத்திருப்பான்!
அவனுடைய சகோதரர்களுக்கு அது பலவேளைகளில்
கோபத்தை ஏற்படுத்தினது. ஆனால் யோசேப்பின் தகப்பனார் அவனிடத்தில் மிகவும் அன்பு செலுத்தினார்.
யோசேப்பிற்கு மிகவும் அழகான ஆடை ஒன்றை செய்வித்தார். அது பல வருணங்கள் கொண்ட அங்கி.
அங்கி என்றால் அரபு தேசத்து குழந்தைகள் அணியும் தோப் (Thowb / Thob) போன்ற நீளமான
ஒரு ஆடை. யோசேப்பு அதை அணியும்பொழுது மிகவும் அழகாக இருந்திருக்கும்.
பரிசுத்த வேதாகமத்தில் ஒரு சிறுவன்
அணிந்த ஒரு விசேஷமான ஆடையைப் பற்றிகூட சொல்லப்பட்டிருப்பது ஆச்சரியமல்லவா? உங்களுடைய
பெற்றோர்கள் உங்களுக்கு வாங்கிக் கொடுத்த சில பிடித்த பொருட்களைப் பற்றி சொல்ல முடியுமா?
உங்களுடைய பெற்றோர்களுக்காக தவறாமல் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்!
வேத
பகுதி: ஆதியாகமம் 37: 1 – 4
மனப்பாட
வசனம்: நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார் (சங்கீதம்
103:5)
No comments:
Post a Comment